அலை - 20

431 16 7
                                    

அந்த அறை மொத்தமும் அமைதியையும் வேதனையையும் தத்தெடுத்திருந்தது. நேற்று சகோதரன் கூற கேட்ட செய்தியே நெஞ்சடைக்க வைத்திருக்க அஸ்வினால் அன்பு அமர முடியவில்லை. 

மனதின் அவஸ்தையை கால்கள் ஆட்டி நிதானித்துக்கொண்டிருந்தான். அந்த அறையில் குழுமியிருந்த மூன்று மருத்துவர்கள் ஏதேதோ மெடிக்கல் டெர்ம்ஸ் வைத்து விளக்கம் அளித்தனர். 

ஒரு கட்டத்தில் பொறுமையற்றவனாக, "கம்மிங் ஸ்ட்ரையிட் டு தி பாயிண்ட் டாக்டர், எனக்கு இந்த பெர்ஸண்டேஜ், பயாலஜி ஒர்டஸ் எல்லாம் தெரியாது. என் மனைவியை காப்பாத்த ஒரே ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தா கூட அதுக்கான முயற்சியை நான் விட மாட்டேன்" என்றான் தெளிவாக. 

"குட் மிஸ்டர் அஸ்வின். உங்களோட நம்பிக்கை தைரியம் எல்லாம் பாராட்ட வேண்டியது தான். அதே தைரியத்தை உங்க மனைவிகிட்ட நாங்க எதிர்பாக்குறோம்" என்றான் அர்ஜுன். 

"நான் அவங்கள அப்சர்வ் பண்ணதுல அவங்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை அவங்க புழைக்கிறதுல. பயம், தவிப்புனு ஒரு எமோஷனல் பாலா இருக்காங்க. மெடிசின் தாண்டி அவங்க மெண்டல் சப்போர்ட் இதுல இருந்தா மட்டும் தான் எங்களால அந்த டுவன்ட்டி பைவ் பெர்ஸன்டேஜ் கேரெண்ட்டி கூட சொல்ல முடியும்" 

மகனை தொடர்ந்து வரதராஜனும், "எஸ், அவங்க இம்யூன் சிஸ்டம் பலப்படணும். அதுக்கு மேல தான் எங்களால டிரீட்மென்ட் பண்ண முடியும். இவங்க கண்டிஷன்ல ஒரு நல்ல விஷயம் என்னனா நோய் பரவுற வேகம் கம்மி. சோ அவங்கள பிசிக்கலா, மென்டலா முன்னேத்தி ட்ரீட் பண்ணலாம்" 

"பட் இந்த ஒரு மாசம் வலிய ஆரோஹி தாங்கணுமே" அவள் வேதனையை கண்கூடாக பார்த்தவன் அல்லவா அவன், மீண்டும் அந்த வேதனையை அனுபவிக்க விட மனம் ஏற்கவே இல்லை. 

"வி கேன் டேக் கேர் ஆப் இட் அர்ஜுன்" என்றான் வருண் சக்கரவர்த்தி, வரதராஜனின் இளைய மகன். 

அஸ்வினின் எப்படி என்னும் கேள்விக்கு, "மைல்டான பைய்ன் கில்லர்ஸ், அதிகமா அந்த நேரம் அவங்கள தூங்க வச்சு பாத்துக்கலாம். 

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now