அலை - 19

422 16 5
                                    


"அக்கா நீங்க எப்பவும் இவ்ளோ அமைதியா தான் இருப்பிங்களா?" 

தனக்கு ட்ரிப்ஸ் மாற்றிக்கொண்டிருந்த செவிலியர் முகம் பார்த்து ஆரோஹி ஒரு ஆர்வத்தில் கேட்டுவிட, "ஆரூ" அஸ்வின் மனைவியை அதட்டினான். 

"சும்மா தான் நாராயணா கேட்டேன். ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்கு தானே தெரியும். என்ன க்கா நான் சொல்றது சரி தானே?" 

"ஆரூம்மா நீ படு" என்றான் அஸ்வின் மீண்டும். 

"இல்ல சார் அவங்க படுக்க வேணாம், கொஞ்சம் ஒக்காந்து இருக்கட்டும்" என்ற அந்த செவிலியர் ஆரோஹி முகம் பார்த்து மெல்ல புன்னகைத்தாள், 

"நான் எப்பவும் இப்டி தான் மேம். கொஞ்சம் வலிக்கும் வேணும்னா என் கை புடிச்சுக்கோங்க" 

அந்த பெண் கூறவும் வேகமாக எழுந்து வந்த அஸ்வின் ஆரோஹி தோளோடு அணைத்துக்கொள்ள, அவன் காதல் பார்த்து அந்த பெண்ணின் இதழில் மெல்ல புன்னகை அரும்பியது. 

தான் வந்த பணியை முடித்து ஆரோஹியின் உடல்நிலையை ஒருமுறை பரிசோதித்தவள் அதே அறையில் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறு மேஜையில் குறிப்புகளை எழுதி வைத்து யாருடனோ கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தாள். அவளை கண் எடுக்காமல் ஆரோஹி பார்க்க அஸ்வினுக்கே அது சங்கடமாக இருந்தது. 

"ஹே லூசு பொண்ணே இப்படியா ஒருத்தர வச்ச கண்ணு வாங்காம பாப்ப?" 

"கிரிக்கெட்டரே எனக்கு அவங்கள பாத்து நர்ஸ் ஆகணும்னு ஆசையா இருக்கு. படிக்க வக்கிரீங்களா?" 

"என்ன திடீர்னு? இதுக்கு முன்னாடி நர்ஸ் பாத்ததே இல்லையா?" 

"பாத்துருக்கேன், ஆனா இவங்க ரொம்ப சாப்ட். அவங்க போடுற ஊசி கூட ரொம்ப வலிக்கல. குழந்தையை பாத்துக்குற மாதிரி பாத்துக்குறாங்க" 

அஸ்வின், "நீ ஸ்பெஷல்லடா அதுனாலயா இருக்கலாம்" 

"ஷி இஸ் ஆல்வேஸ் லைக் திஸ்" திடீரென தன் பின்னே கேட்ட குரலில் இருவரும் படக்கென திரும்ப அங்கு ஒரு மருத்துவன். 

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now