அலை - 9

415 21 3
                                    

விடிந்தும் விடியாத காலை பொழுதில் தூக்கம் கலையாத நேரத்தில், கையில் தேநீரோடு உறக்கம் பாதி, களைப்பு பாதியாய் இருந்தவரை அஸ்வின் வேப்பிலை அடித்து எழுப்பி விட்டிருந்தான்.

பதறிய மதிவர்தினியின் முகம் பார்த்தே சகோதரனின் கோவத்தை அறிந்துகொண்ட சித்தார்த், அன்னையை மட்டும் அழைத்து வந்துவிட்டான் அஸ்வின் இல்லத்திற்கு.

வந்தவர்கள் நேராக அஸ்வின் அறைக்கு செல்ல, "இங்க இருக்கேன்." அடிக்குரலில் சீறியவனைப் பார்த்தவர்கள், அவன் நிலை கண்டு அரண்டுதான் போயினர்.

உறக்கத்தின் காரணமா இல்லை, கோவத்தின் காரணமா என தெரியாத அளவிற்கு சிவந்த விழிகள், கலைந்த சிகை, இரவு படுக்கைக்கு அவன் உடுத்தும் அரைக் கால்சட்டை, கையில்லாத பனியன் என பார்ப்பதற்கே பயந்து வந்தது மதிக்கு.

"செத்தார் என்னை பெற்ற அன்னை..." அன்னை காதில் முணுமுணுத்து சகோதரன் நோக்கி நடந்தான் சித்தார்த்.

"ஏன்டா அங்க இருக்க? அண்ணி எங்க?" கேள்வி கேட்டவாறே வந்தவனை சினம் கொண்டு பார்த்த அஸ்வின்,

சித்தார்த், ஆரோஹியைக் கண்ட நொடி சகோதரனை வெளியே தள்ளி கதவை அமைதியாக மூடினான்.

"அண்ணிக்கு என்னாச்சு அஸ்வின்?"

"அஸ்வின்..." மதியும் அஸ்வின் அருகே வர,

"அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க." என்றான் அழுத்தத்துடன்.

படபடப்போடு மகனின் பேச்சை ஜீரணிக்க முயன்றவர் எண்ணங்கள், சில நொடிகளில் எங்கெங்கோ பயணித்து சோர்ந்து போனது.

"என்ன தம்பி இது பேச்சு?" சுணங்கிப் போன குரலில் அன்னை கேட்டதும், புதல்வனை வாட்டிதான் பார்த்தது.

"தப்பா எதுவும் சொல்லல ம்மா. ஆனா கொஞ்ச நாள் அவளை உங்ககூட வச்சுக்கோங்க, நானே வந்து கூட்டிட்டு போய்க்கிறேன்."

"உனக்கு தான் மேட்ச் எதுவும் இல்லையே அஸ்வின்." அஸ்வின் கிரிக்கெட்டை மனதில் நினைத்து பேசுகிறானோ என சித்தார்த் கேள்வி கேட்க, 'இல்லை' என தலையை ஆட்டினான் அஸ்வின்.

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now