அலை - 6

329 11 0
                                    

திவ்யாவிடம் திருமணத்தைப் பற்றி பேசி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தது. இந்த ஒரு மாதத்தில் மதிவர்தினி திவ்யா தம்பதியினரை சிறிதும் வற்புறுத்தவில்லை.

மாறன் தன்னால் இயன்ற மட்டும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி தீவிரமாக விசாரித்து விட்டான். எதிலும் சிறு பிசுறு கூட தட்டவில்லை. குடும்பம் எல்லாம் சரி, ஆனால் அஸ்வின்? அந்த பெரிய கேள்வி தொக்கி நிற்க, முடிவெடுக்க முடியாமல் தவித்து திண்டாடியவர்கள் முன்னே வந்து நின்றான் சித்தார்த்.

"வீட்டுக்கு வாங்க க்கா, மாப்பிள்ளை பாக்குற மாதிரி வர வேணாம். ஒரு அம்மா வீட்டுக்கு வர்ற பொண்ணு மாதிரி வாங்க. ப்ளீஸ்..."

தன்னிடம் ஒரு சகோதரன் போல் கெஞ்சி நிற்கும் சிறியவன் மனதை நோகடிக்க விரும்பாமல் இருவரும் சம்மதிக்க, அஸ்வின் இல்லம் வந்தனர். விசாலமான அந்த பெரிய வீட்டில், அந்த தம்பதிக்கு ஏகபோக வரவேற்பு.

மாலை சிற்றுண்டியை முடித்து கிளம்புகிறேன் என நின்றவர்களை, மதிவர்தினி விடவே இல்லை. இரவு உணவை முடித்துதான் செல்ல வேண்டும் என்கிற ஆணை வந்துவிட, அவரது பாசப்பிணைப்பு நிறுத்திவிட்டது.

கணவன் காதில், "பொண்ணு தரணும்னு வேணும்னே பாசமா பாத்துக்குறாங்களோ?" கிசுகிசுத்த மனைவியிடம், தானும் அதே தான் நினைக்கிறேன் என்பதை, சிரிப்பை அடக்க துடிக்கும் அவன் இதழ்கள் கூறியது.

"ஏமாற வேணாம்..." மீண்டும் அவளே கூறிக் கொள்ள, சிறிது நேரத்தில் அஸ்வின் தந்தை ராகவ் வந்தார்.

மனைவியின் ஆசையை அறிந்திருந்தவர் வந்தவர்களிடம் நலம் விசாரித்து, மாறன் வேலை பற்றிய தகவல்களை அறிந்து பொதுவான பேச்சுகளைத் தொடர, நேரம் ரெக்கை கட்டி பறந்தது. அவள் நினைத்ததை விட அந்த குடும்பம் அதிக வித்தியாசமாக இருந்தது.

சித்தார்த், ராகவ் இருவரும் அவர்கள் குடும்ப தொழிலை தான் பார்க்கின்றனர். இருவரும் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியது. மகனை தந்தை கேலி செய்வதும் தந்தையை மகன் கேலி செய்வதும், ஒருவர் பேசியதில் தவறு இருந்தால் மற்றவர் அதனை திருத்த, அதற்கு ஒரு சிறு பாச சண்டை என அந்த குடும்பம் அழகிய ஓவியமாக தெரிந்தது.

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now