அலை - 7

321 14 3
                                    

சுற்றிலும் வெறுமை, எங்கும் இருளை விஞ்சும் அமைதி, முற்றிலும் பயம். இரவில் வெளிச்சத்தைத் தேடும் வண்டுகளாய் அமைதியினைத் தேடி தவித்திருந்த அவன் ஏக்கத்தை, இரவின் காற்றோசை கூட அசைக்கவில்லை.

மனமெங்கும் பயம் வியாபிக்க, உடலை சற்று தளர்த்த, அந்த ஈரமான புல்வெளியில் வெறும் பாதங்களோடு நடைபயிலும் சிறுவனின் ஆர்வத்தில், தன்னுடைய எட்டுக்களை பார்த்துக்கொண்டே நடந்தான். இந்த இரண்டு வாரங்களில் அவன் வாழ்க்கையின் மாற்றம் சொல்லில் அடங்காதது.

எங்கிருந்தோ திடீரென காற்றின் உபயத்தால் இழுத்து வரப்பட்ட மேகம், பாரபட்சம் பாராது மழையினை அடித்து வீழ்த்தியிருக்க, அதன் தாக்கமாய் இன்னமும் படபடக்கும் இதயம் போல தான் அவன் நிலையும்.

ஆனால் அவன் வாழ்க்கை அந்த புயல், மழையோடு நிற்கப்போவதில்லை, அதன்பிறகு வரும் வானவில்லாய் வளைந்து அவன் வீட்டினுள் புகுந்து, வண்ணத்தைப் பரப்பவிருக்கின்றது. விடிந்தால் திருமணம்! அந்த நினைவே உடலை சிலிர்க்கச் செய்தது.

"எப்பா டேய்... முடியலடா சாமி!" தலையை அழுத்தமாக கோதி வாய் விட்டு புலம்பினான். எதிரணியினரை ஒற்றை அர்த்த புன்னகையோடு கதிகலங்க வைப்பவன் நிலை, இன்று பரிதாபத்திலும் பாவமானது.

சிரிப்பிற்கே பஞ்சமாய், யவ்னியிடம் என்ன பேச போகிறோம் என யோசித்து யோசித்தே, இரண்டு வாரங்களைத் தயக்கத்தோடு கழித்துவிட்டான். மதி ஒரே முடிவாக உடனே திருமணம் என பிடிவாதம் பிடித்துவிட்டார். எவ்வளவோ ராகவ் பேசி பார்த்தும் அசைந்தாரில்லை.

"அவன் சரி சொல்றப்பயே முடிக்கணும்." என்றுவிட்டார்.

அவனுக்கே இந்நிலை என்றால், ஆரோஹி சொல்லவே வேண்டாம். அன்று மருத்துவமனையில் பேயறைந்தாற் போல் அப்படியே நின்றுவிட்டாள் அந்த இரவு முழுவதும். ஆண்கள் மூவருக்குமே அவள் நிலை பாவமாக இருந்தது. வந்த வழியே சென்றவளை சித்தார்த் கெஞ்சி இருக்க வைத்து, காலையிலே தகவலை திவ்யாவிடமும் மாறனிடமும் கூறிவிட்டனர்.

அலைபாயுதே (Completed)Donde viven las historias. Descúbrelo ahora