அலை - 13

330 12 2
                                    

விமான நிலையத்திலிருந்து இறங்கியவன் நேரடியாக வந்து நின்றது அன்னை வீட்டில் தான். பம்பரமாக வீட்டினுள் நுழைந்தவனை அவன் தந்தையே வித்தியாசமாகப் பார்த்தார்.

"கங்கிராட்ஸ் அஸ்வின்!" மூன்று சதம், ஒரு அரை சதம், மூன்று மேன் ஆஃப் தி மேட்ச் இவை அனைத்திற்கும் சேர்த்து, மேன் ஆஃப் தி சீரிஸ் என, அஸ்வின் பாராட்டு மழையில் நனைந்துதான் போனான்.

அந்த மகிழ்ச்சி தந்தை முகத்திலும் தெரிய, "தேங்க்ஸ் ப்பா!" மனதார அவரை அணைத்து விடுவித்தவன் பார்வை, அவரிடமிருந்து விடைபெற்று வீட்டை அலசியது.

"அம்மா எங்க ப்பா?" என்றவன் உள்ளே சென்று, "மதி..." என அழைக்க, அவரும் வந்து தன் பங்கிற்கு மகனைக் கொஞ்சி தீர்த்துவிட்டார்.

"ஆரோஹி எங்க? சித்தார்த் கூட வெளிய போயிருக்காளா?" என்றான் ஆர்வத்தை அடக்க முடியாமல்.

"உனக்கு தெரியாதா? அவ சொல்ல சொல்ல கேக்காம உன் வீட்டுக்கு போயிட்டாடா. வேலைல ஏதோ பிரச்சனை போல, திடீர்னு வர சொல்லிட்டாங்களாம்."

"இல்லையே ம்மா, எப்ப போனா? நீங்க ஏன் தனியா விட்டீங்க? வீட்டுல சமைக்கவும் ஆள் ரெடி பண்ணல, அவளுக்கு சமைக்கவும் தெரியாது. என்ன பண்றா, தனியா அங்க?" அன்னையைத் திட்டி வைத்தான்.

"டேய் நான் என்னமோ தனியா விட்ட மாதிரி பேசுற? ரெண்டு மணி நேரம் என் கூட சண்டைக்கட்டி நின்னுதான் போயிருக்கா. சாப்பாடுக்கு ஆள் ஏற்பாடு பண்ணிதான் அனுப்பி வச்சிருக்கேன்." என்றபின்னும் நிற்கவில்லை.

"சரி ம்மா, நான் வர்றேன். வர்றேன் ப்பா!" சிட்டாக பறந்துவிட்டான்.

வீட்டிற்கு விரைந்து வந்தவன், மனைவியை வீடெங்கும் தேடி இறுதியாக வாட்ச்மேனிடம் வந்தான்.

"பாப்பா வீட்டுக்கு மூணு நாளா வரலையே சார்?" பெரிய குண்டாக அவன் தலையில் அவர் இறக்க அஸ்வின், மனைவிக்கு உடனே அழைக்கத் துவங்கினான்.

அழைப்பு சென்றுகொண்டே இருந்தது. அவள் அதனை ஏற்கவே இல்லை. அன்று இருவருக்கும் நடந்த உரையாடலுக்கு பிறகு, இருவருக்கும் இடையில் அதிகமான பேச்சு வார்த்தை இல்லை.

அலைபாயுதே (Completed)Where stories live. Discover now