32 முடிவுக்கு வந்த சீண்டல்

403 43 4
                                    

32 முடிவுக்கு வந்த சீண்டல்

ஜாகிங்கை முடித்துக் கொண்டு வந்தான் அர்னவ். குஷி அவர்களது அறையில் இல்லை. குளியல் அறையிலிருந்து வந்த தண்ணீர் கொட்டும் சத்தம், அவனது முகத்தில் குறும்பு புன்னகையை வரவழைத்தது. சத்தமின்றி அவர்களது அறையின் கதவை சாத்தி தாளிட்டான். குளியலறையின் அருகே வந்து, சுவரில் சாய்ந்து அமைதியாய் நின்று கொண்டான். குளியலறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு தயாரானான். அவள் வெளியே வந்தவுடன், எதைப் பற்றியும் யோசிக்காமல், பின்னால் இருந்து குஷியின் இடையை சுற்றி வளைத்து, அவளை தூக்கிக்கொண்டு காற்றில் வட்டமடிக்க துவங்கினான்.

அவன் அப்படி செய்துகொண்டிருக்கும் போது, எதிரில் இருந்த கண்ணாடியில் அவர்களது பிம்பத்தை பார்த்து திகைப்படைந்தான். அவள் தன் உடலில் வெறும் துண்டை தான் சுற்றியிருந்தாள்.

அப்படியே நின்று கண்ணாடியில் அவளது பிம்பத்தை திகைப்புடன் பார்த்தபடி இருந்தான். அவளது வழுவழுப்பான கால்கள் அந்தரத்தில் நின்றன. கண்ணாடியில் தெரிந்த அவள் மீது, அவனது கண்கள் மேய்ந்தன. நெஞ்சிலிருந்து முட்டிக்கு மேல் வரை துண்டால் சுற்றப்பட்டிருந்த அவளது மெல்லிய தேகம், அவனது இதயத்துடிப்பை பன்மடங்காக்கியது.

கண்களை இறுக்கமாய் மூடி, அவளை சுற்றி வளைத்திருந்த அவனது கரங்களை பற்றி கொண்டிருந்தாள் குஷி. அவளது தோளில் ஒட்டியிருந்த ஈரக் கூந்தல், அவளை மேலும் கவர்ச்சியாய் காட்டியது. அந்த சிகப்பு நிற துண்டு பெரும்பாலான பகுதியை மறைத்துக் கொண்டிருந்தாலும், அவளது பளிங்கு தேகத்தை உயர்த்திப் பிடித்தது.

இவையெல்லாம் போதாதென்று, அவளது கூந்தலிலிருந்து வீசிய நறுமனம், அவனுக்கு கிறக்கத்தை தந்தது. கண்ணாடியின் மீதிருந்த தன் கண்களை, தன் கையில் அகப்பட்டு கிடந்தவளை நோக்கி திருப்பினான். தன் சுயநினைவின்றி அவளது தோளில் தன் இதழ் பதித்தான். அவளது மென்மையான ஸ்பரிசம், அவனை மயிர் கூச்செறிய வைத்தது.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Opowieści tętniące życiem. Odkryj je teraz