35 காத்திருந்த சங்கமம்

394 39 3
                                    

35 காத்திருந்த சங்கமம்

குஷியை குற்ற உணர்ச்சி கொன்றது. அந்த குற்ற உணர்ச்சியுடன் அர்னவ்வை எதிர்கொள்ள அவளால் இயலவில்லை. அவளால் எப்படி முடியும்? அவனது கேள்விகளுக்கு அவளிடம் பதில் இருக்கிறதா? அனைத்தும் இப்படி தலைகீழாய் மாறும் என்று அவள் எதிர்பார்க்கவில்லையே. சமையலறையை விட்டு வெளியே வராமல் அங்கேயே ஒளிந்து கொண்டிருந்தாள்.

அலுவலகம் செல்ல தயாராகி, உணவு மேசைக்கு வந்தான் அர்னவ். அங்கு அவன் குஷியை காணவில்லை அவள் எங்கு சென்றாள்? தோசை மற்றும் சட்டினியுடன் வந்த ரத்னா, அதை அவனுக்கு பரிமாறினார்.

"இன்னொன்னு வேணுமா?"

"இல்லம்மா, எனக்கு போதும்"

"குஷி, அவனுக்கு போதுமாம். தோசை சுடுறதை நிறுத்திடு" என்றார் சமையலறையை பார்த்தபடி ரத்னா.

அப்படி என்றால் அவள் சமையலறையில் தான் இருக்கிறாள்.

"மா, எனக்கு ஒன்னு வேணும்" என்றான் நந்தா.

ரத்னா குஷியிடம் அதை கூறுவதற்கு முன், குஷியே பதில் கூறினாள்.

"சுடுறேன் ஆன்ட்டி"

"மா, அவங்களுக்கு லேட் ஆகலையா?" என்றான் அர்னவ்.

"அவங்களுக்கு இன்னைக்கு காலேஜ் லீவு. நேத்து ஆனுவல் டே நடந்தது இல்லையா, அதனால இன்னிக்கு லீவு கொடுத்திருக்காங்க" என்றான் நந்தா.

"ஆமாம், இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் ஃப்ரீ" என்றார்.

"மா, இன்னைக்கு சாயங்காலம் நானும் லாவண்யாவும் சினிமாவுக்கு போறோம்" என்றான் நந்தா.

"போயிட்டு வாங்க. நான் குஷியை எங்க கூட கூட்டிகிட்டு போறேன்"

"நாங்களா? எங்க போறீங்க?" என்றான் அர்னவ்.

"மெய்த்தி இருக்காரு இல்ல, பெங்காலி காரர்... அவர் வீட்ல இன்னைக்கு ஒரு பார்ட்டி. நானு, அப்பா,  ஷஷி அண்ணன், கரிமா, எல்லாரும் போறோம். நாங்க குஷியையும் கூட்டிக்கிட்டு போறோம். அவ வீட்ல தனியா இருந்து என்ன செய்யப் போறா?தான் நீ வீட்டுக்கு தினமும் லேட்டா வரியே..."

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now