45 அட்டகாச குறும்பு

282 42 3
                                    

45 அட்டகாச குறும்பு

உடைமாற்றிக்கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்தாள் குஷி.  அவளைப் பார்த்தவுடன் தன் முகத்தை திருப்பிக் கொண்டான் அர்னவ்.

"யாரோ என் மேல கோவமா இருக்கிற மாதிரி தெரியுது?"

அவன் அதற்கு ஒன்றும் கூறவும் இல்லை, அவளை பார்க்கவும் இல்லை. அவன் அருகில் வந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

"அல்லவ் மை டார்லிங், என்கிட்ட பேச மாட்டியா?"

தன் கழுத்திலிருந்து அவள் கையை எடுத்து விட முயன்றான்.

"கூல் பேபி... அப்செட் ஆகாத. இன்னும் நிறைய பேலன்ஸ் இருக்கு" என்ற அவளை குழப்பத்தோடு பார்த்தான் அர்னவ்.

அவன் உதட்டில் முத்தமிட்டு, சிரித்தபடி அங்கிருந்து ஓடிப் போனாள் குஷி. அவள் கூறியதை பற்றி யோசித்தபடி, உணவு மேசைக்கு வந்தான் அர்னவ். இன்னும் நிறைய பேலன்ஸ் இருக்கு என்று அவள் கூறியதன் அர்த்தம் என்ன? அவன் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

அவள் கூறியதற்கு அர்த்தம் என்ன என்பது அவன் உணவு மேசைக்கு வந்த பிறகு புரிந்தது. அனைவரும் ஏன் அவனைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று அவனுக்கு புரியவில்லை. ஒன்றும் புரியாமல் புருவம் உயர்த்தினான்.

"அரு, உன் ரூமை விட்டு வெளியே வரும் போது உன் முகத்தை செக் பண்ணிட்டு வான்னு நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன்ல?" என்றான் நந்தா.

ஒரு தட்டை எடுத்து தன் முகத்தை பார்க்க அவன் நினைத்தபோது, நந்தா முந்திக்கொண்டு அவனுக்கு ஒரு தட்டை வழங்கினான். அந்த தட்டில் தன் முகத்தை பார்த்த அவன், குஷியின் பொட்டு அவன் கன்னத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்து விழி விரித்தான். அவன் குஷியை பார்க்க, அவள் வெட்கப்பட்டு நகம் கடித்தாள். அவள் கூறியது இதைப் பற்றி தானா? அவள் வேண்டுமென்றே அவளது பொட்டை அவன் கன்னத்தில் ஒட்டி விட்டிருக்க வேண்டும்.

அவனுக்கு பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தாள் குஷி. தன் கன்னத்தில் இருந்த பொட்டை எடுத்து, அதை அவள் கன்னத்தில் சாதாரணமாய் ஒட்டி விட்டான் அர்னவ். தன் சிரிப்பை அடக்கியபடி சாப்பிடத் துவங்கினாள் அவள். சிறிது நேரத்திற்கு பிறகு,

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Dove le storie prendono vita. Scoprilo ora