அதிகாலை

3.9K 108 6
                                    

அதிகாலைப் பொழுது. மார்கழி மாதம்.
பக்கத்து பெருமாள் கோவிலில் இருந்து திருப்பவை ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.

"ஏம்மா கோலம் போட்டு முடிச்சிட்டியா?
காலேஜ் பஸ்ஸை மிஸ் பண்ணிடப்போர. சீக்கிரம் வந்து ரெடியாகு." சரசு பூர்ணிமாவை அழைத்தாள்

பூர்ணிமா, சரசு சுந்தரம் தம்பதியரின் ஒரேமகள். நடுத்தர குடும்பம். கம்ப்யூடர் என்ஜினியரிங் படிக்கிறாள். நான்காவது வருடம் அதாவது ஃபைனல் இயர். அழகான முகம். அகன்ற பெரிய கண்கள். அழகிய கூரான மூக்கு. சிவந்த சிறிய உதடுகள்.நல்ல நிறம். மாசுமருவற்ற முகம். ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம்.

"இதோ முடிஞ்சிடிச்சிமா. வந்துட்டேன்."
என்றவாறு உள்ளே வந்தாள்.

அவசரமாக கிளம்பி ஒருவழியாக காலேஜ் பஸ்ஸை பிடித்தாள்.

அவள் அழகைப்பற்றி அறிந்தோம்.
அவள் படிப்பிலும் கெட்டி. அழகாக
ஆடுவாள். இனிமையாகப் பாடுவாள்.
அவளுக்கு நிறைய ஃப்ரன்ட்ஸ்.
எல்லோரிமும் கலகலப்பாக பழகுவாள். ஆனால் மிக நெருக்கமான ஃப்ரன்ட் நிவேதிதா.

இன்று அதிகாலை நிவேதிதா என்ன செய்தாள் என்று பார்ப்போம். நன்றாக துங்கி்க்கொண்டிருந்தாள். ஏழரை மணிக்குதான் எழுந்தாள். எட்டு மணிக்கு ரெடியாகி வெளிய வந்தாள்.
கார் டிரைவர் தயாராக இருந்தார்.
காரில் கல்லூரிக்கு கிளம்பினாள்.

நிவேதிதாவும் பூர்ணிமாவைப்போலவே மிகவும் அழகு. ஆனால் நிவி மிகவும் அமைதியானவள். யாரிடமும் அளவோடுதான் பழகுவாள்.
அவளின் ஒரே ஃப்ரன்ட் பூர்ணிமாதான். ஐந்து வயதிலேயே
தாயை இழந்தாள். தந்தை பெரிய பிஸினஸ்மேன். இவளை கவனித்துக்கொள்ள நிறைய வேலைக்காரர்கள் இருந்தனர்.
ஆனால் இவள் அன்புக்காக ஏங்கினாள். அப்போதுதான் அவளுக்கு பூர்ணிமாவின் நட்பு கிடைத்து. அமைதியாக இருந்த நிவியுடன் பூர்ணி தானே வலியச்சென்று பழகி நட்பை ஏற்படுத்திக்கொண்டாள். நிவியும் பூர்ணியிடம் மட்டும் கலகலப்பாக பழக ஆரம்பித்தாள். அன்றுமுதல் இன்றுவரை அந்த நட்பு தொடர்கிறது.

யாரோ     (Completed)Where stories live. Discover now