லஷ்மிமா

1K 51 5
                                    

"கடவுளே லஷ்மிமா சீக்ரமா குணமாயிடணும். அவுங்க நல்லபடியா இல்லத்திற்கு வந்து சேரணும். என்னை இப்ப இல்லத்து வாசல்ல இருந்து சிவன் கோவிலுக்கு கொண்டுவந்து விட்டுட்டியே. என்ன பெத்தவங்கள போய்ச்சேர இனி எந்த பாதையில போகணும்? எவ்ளோ தூரம் போகணும்? நீ தான் வழிகாட்டணும். உன்னத்தான் நம்பியிருக்கேன்." என்று எதிரில் இருந்த விநாயகரைப் பார்த்து மனதிற்குள் பலவாறு வேண்டிக்கொண்டிருந்தாள் உஷா.

ஆனால் அங்கே லஷ்மியின் உயிர் உடலை விட்டு பிரிந்து கொண்டிருந்தது. உஷாவிடம் உண்மையைக் கூறிவிட்டதாலும், உஷா தன் வாயாற, மனதாற "அம்மா" என்று அழைத்ததாலும் தன் பிறவிக்கடன் முடிந்ததாக எண்ணியவாறே அவள் மனநிறைவுடன் மரணத்தைத்தழுவினாள்.

மரணம் யாருக்கு எப்படி எப்பொழுது நிகழவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார்.? கடவுளா? விதியா?
வாழும் வரை இருந்த நினைவுகள் இறந்த பிறகு உடலில் தங்குமா? இல்லை உயிருடன் செல்லுமா?

உதாரணத்திற்கு ஒரு மடிக்கணிணியை(laptop) எடுத்துக்கொள்வோம்.
அதன் மெமரி மனிதனின் மூளை என்றும், புராஸஸர் மனிதனின் இதயம் என்றும், கொண்டால், பேட்டரி தீரும்வரை லேப்டாப் வேலைகளை செய்வதுபோல் மனிதனும் உயிர் பிரியும் வரை வாழ்வை வாழ்கிறான்.

அவ்வளவு தானா? இல்லை. ஏனென்றால் பேட்டரியை ரிசார்ஜ் செய்யலாம். ஆனால் உயிர் போனால் போனதுதான். திரும்புவதில்லை.

உஷா  கோவிலில் இருந்து எழுந்து ஏதோ சிந்தனையுடனே மெதுவாக நடந்து சென்றாள். பெற்றவர்களை தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று தோன்றியது. இப்போது என்ன குறை. பெற்ற தாய்க்கும்மேல் அதிகமாக அன்பும் பாசமும் உள்ள என்  அம்மா லஷ்மிமா இருக்காங்களே! பிறகு என்ன கவலை என்றெல்லாம் எண்ணியவாறே உள்ளே சென்றாள்.
அங்கு நீலாவதி அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தாள். வேகமாக லஷ்மி இருந்த அறைக்குள் விரைந்தாள். லஷ்மியைப்பார்த்து அப்படியே உறைந்து நின்று விட்டாள். அவளைப் பின்தொடர்ந்து வந்த நீலாவதி"லஷ்மி நம்மள விட்டுட்டு போய்ட்டா உஷா. லஷ்மீ லஷ்மீ ஏன் உனக்கு இவ்ளோ அவசரம். எங்கள இப்டி தவிக்க விட்டுட்டு போய்ட்டியே. ஐயோ! லஷ்மி லஷ்மி நான் என்ன செய்வேன்?" என்று அழுதாள்.

உஷா தன் முகம் வெளுத்து, வெறித்த பார்வையுடன் அப்படியே சிலை போல நின்றாள்.

இதைப்பார்த்த நீலாவதி என்ன ஆச்சி இவளுக்கு, ஏன் இப்படி பேயறஞ்சமாதிரி நிக்கிறா,என்று நினைத்தவாறே அவளைப்பிடித்து உலுக்கினாள்.
"உஷா...உஷா....இதபாரும்மா. துக்கம் தாங்கலைன்னா அழுதுடு. இந்தமாதிரி அமைதியா இருக்காத. நல்லா அழுதுடு. அப்பதான் உன் மனசு ஆறும். கொஞ்சம் லேசாகும்"

"ம்ம்ம் மேடம்.….."

"உன் அம்மா லஷ்மிமா உன்ன விட்டுட்டு போய்ட்டாங்க. இதுதான் உண்மை. இங்க பார் அவளோட உயிரற்ற உடல். பாரு பாரு நீயே பாத்து புரிஞ்சிக்க. நான் இவ போனத நெனச்சி அழுவனா இல்ல உன்ன பார்த்து அழுவனா ஐயோ!."

உஷா லஷ்மியின் அருகில் சென்று பார்த்தாள். " லஷ்மிமா லஷ்மிமா அம்மா அம்மா அம்மா அம்மா " என்று கதறி கதறி அழுதாள்.

உஷாவுக்கு அழுவது பிடிக்காது.
அவளைப்பொறுத்தவரை மனவுறுதியற்றவர்கள் கோழைகள் கையாலாகதவர்கள் பிடிவாதபேராசை கொண்டவர்கள்தான் தொட்டதெற்கெல்லாம் அழுவார்கள் என்று நினைப்பு. ஆனால் அன்பும் பாசமும் கூட கண்ணீரை வரவழைக்கும் என்று அன்றுதான் உணர்ந்தாள்.
    *******************************
பிறகு பல நாட்கள் கழித்து இன்று இங்கே என்னோட ப்ரண்ட்ஸோட அன்பு எனக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. லஷ்மிமாவின் ஞாபகம் வந்து விட்டது. அதனால் என்னைப்பற்றியும் என் நிலையையும் படர்க்கையிடத்திருந்து(third person) எழுதினேன். இனி நிகழ்கால கதையைப் பார்ப்போம்.

(Continues from the 7th part சந்தேகம்)

யாரோ     (Completed)Where stories live. Discover now