சர்ப்ரைஸ்!

1K 50 5
                                    

அன்று ஞாயிற்றுக்கிழமை. நிவியின் வீட்டிற்கு கிளம்பினேன். அவளுக்கு போன் செய்தேன்.  நாட் ரீச்சபிள் என்று பதில் வந்தது. இருந்தாலும் வீட்டிற்கு சென்று காலிங்பெல்லை அழுத்தினேன். வேலைக்காரம்மா வந்து கதவை திறந்தாள்.
"நிவி இல்லையா?"என்று கேட்டேன்.
நிவிமாவும் ஐயாவும் ஆபீஸ்கு போயிருக்காங்க."
"ஆண்டி?"
"அவுங்க இங்க பக்கத்துல இருக்குற கோயிலுக்குதான் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க."
"சரி அப்ப நான் கிளம்பறேன். ஈவினிங் வரேன்" என்றேன்.
அப்போது என் செல்போன் ஒலித்தது. எடுத்து பார்த்தேன். நிவி தான். எடுத்து பேசினேன்.
"ஹலோ"
"ஹாய் உஷா எங்க இருக்க?"
"உன் வீட்ல தான் இருக்கேன். யாருமில்லை. அதான் கிளம்பிட்டிருக்கேன்"
"அத்தை இன்னும் கோயில்ல இருந்து வரலியா?" இப்ப வந்துடுவாங்க. அங்கே ஏதாவது புக்ஸ் இருக்கும். நீ படிச்சிட்டே இரு. இல்ல டிவி பாத்திட்டு இரு. நான் இன்னும் அரை மணி நேரத்தில் வந்திடுவேன். பேகாதே."
"சரி இருக்கேன். நீ சீக்கிரம் வா"
"ஓகே."
போனை கட் பண்ணி விட்டு பார்த்தேன். அங்கே ஒரு பெரிய பேக் நிறைய புத்தகங்கள் இருந்தன.
"ஏன் புக்ஸையெல்லாம் இங்க வச்சிருக்கீங்க" என்று வேலைக்காரம்மாவிடம் கேட்டேன்.
அதற்குள் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு "வேஸ்ட் பேப்பர் கடையில் போடச் சொல்லி வச்சிருக்காங்க. இதோ இப்ப எடுத்திட்டு பேகணும்."என்றாள்.
"என்ன புக்ஸ் நான் பாக்கட்டுமா"
"பாருங்கமா. பிடிச்ச புக் இருந்தா படிக்க எடுத்துக்கங்க."
பார்த்தேன். சில புக்ஸும் சில டைரிகளும் இருந்தன. எல்லாம் அங்கிளோட டைரிகள். அதில் இருந்து ஒன்றை எடுத்தேன். 1996ம் வருட டைரி  கையில் வந்தது. இது நாங்கள் பிறந்த வருடம். நிவியின் அம்மாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை அந்த டைரியைப்படிக்க தூண்டியது. அடுத்தவர் டைரியைப் படிப்பது தவறு என்று மனம் தடுத்தது. அவர் அறையில் இருந்து எடுத்து படித்தால் தான் தவறு. வேஸ்ட் பேப்பர் ஆன பிறகு படிப்பது தவறில்லை என்றும் தோன்றியது. அந்த டைரியை மட்டும் எடுத்து என் பேகில் வைத்து கொண்டேன். காபியை குடிக்க ஆரம்பித்தேன்.
"என்னம்மா எந்த புத்தகமும் வேண்டாமா? நான் கடைக்கு கொடுத்து விடவா? "என்றாள் வேலைக்காரம்மா.
எனக்கு குப்பென்று வியர்த்தது .
"வேண்டாம். நீங்க வேஸ்ட் பேப்பர் கடையில் போட்டுடுங்க. நான் கெளம்பறேன். கொஞ்சம் வேலையிருக்கு. அதை முடிச்சிட்டு ஒரு மணிநேரத்தில வந்திடுவேன்னு நிவி கிட்ட சொல்லிடுங்க." என்று கூறிவிட்டு கிளம்பினேன்.

யாரோ     (Completed)Where stories live. Discover now