தாய்ப்பாசம்

1.1K 49 5
                                    

ஆபரேஷன் முடிந்து டாக்டர் சிதம்பரம் வெளியில் வந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.
நீலாவதி அவர் அருகில் சென்று "டாக்டர் நீங்க செஞ்ச உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. ரொம்ப ரொம்ப நன்றி சார்" என்றதும் டாக்டர் " இல்ல நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். ஆக்சுவலா நா இப்ப பண்ணது வெரி வெரி ரிஸ்கான ஆபரேஷன். இந்த ஆபரேஷன் இதுவரை அஞ்சு வயசு குழந்தையில இருந்து எழுபது வயசு பெரியவங்க வரைக்கும் நிறைய சக்ஸஸ் புல்லா பண்ணியிருக்கிறேன்.
பச்சிளங்குழந்தைக்கு இதுதான்
முதல்முறை. உலக அளவில சில ஆபரேஷன் நடந்திருந்தாலும் இந்தியாவுல இது பர்ஸ்ட் டைம்.
இதுவரை எத்தனையோ குழந்தைகள் இந்த பிரச்சனையோட பிறந்து காப்பத்த முடியாம இறந்திருக்கு. ஏன் முந்தாநேந்து கூட கயல் ஹாஸ்பிடல்ல இந்த பிரச்சனையோட ஒரு குழந்தை பிறந்ததுன்னு கேள்விப்பட்டேன். என்ன ஆச்சுன்னு தெரியல. அனேகமா அந்த குழந்தை இறந்திருக்கலாம்."

"ஏன் டாக்டர் நீங்க அந்தக் குழந்தைக்கும் ஆபரேஷன் பண்ணி காப்பாத்தியிருக்கலாமில்ல."

"இல்ல எனக்கு அவ்ளோ கான்பிடன்ஸ் இல்ல. ஒருவேள ஆபரேஷன் பெயிலியர் ஆயிருந்தா பெரிய பிரச்சனைய பேஸ் பண்ணவேண்டியிருந்திருக்கும். பேரன்ட்ஸ் சும்மா விடமாட்டாங்க. அதுவும் அவுங்களுக்கு அந்த குழந்தை ஐஞ்சு வருஷம் கழிச்சி பிறந்திருக்கு. அது தானா இறந்துட்டா தாங்கிக்கறவங்க ஆபரேஷன்க்கு அப்புறமா இறந்தா டாக்டரே கொன்னுட்டதா நினைக்கறாங்க. என்ன பண்றது அந்தக் குழந்தையோட விதி அதுதான்."

"அப்ப பேரன்ட்ஸ் இல்லாம இருக்கறதுதான் இந்தக்குழந்தையோட அதிர்ஷ்டமா"

"ஆமா உண்மதான்.  இனி இந்தப்பிரச்சினயோட பிறக்கற எந்தக் குழந்தையையும் காப்பத்த முடியும்னு எனக்கு கான்பிடன்ஸ்  வந்திருக்கு."
"தேங்க் யூ டாக்டர். இனி அந்தக்குழந்தை எங்க அன்பு இல்லத்தின் செல்லக்குழந்தை.
பேர் கூட உஷான்னு வச்சிருக்கோம். இப்ப நாங்க போய் உஷாவ பாக்கலாமா டாக்டர்"

யாரோ     (Completed)Where stories live. Discover now