தேவதை

1K 47 4
                                    

என்னை மீறி என் கண்களில் பெருகிய கண்ணீர் சட்டென அணை போட்டதுபோல் நின்றது. நிவியும் பூரணியும் சேர்ந்து என்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார்கள்.

அதன் பின்னர் இன்னும் நான்கு நாட்கள் நாங்கள் மூவரும் ஊட்டியில் மிகமிக மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் இருந்தோம்(செமையா எஞ்சாய் பண்ணோம்). திரும்பி வரவே மனமில்லாமல் திரும்பினோம்.
                  _________
என்ன வாசகர்களே!
உன் நான்காவது கனவு என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா?
என்னை பெற்ற மகளாக நினைத்து அன்பைக்கொட்டி வளர்த்த என் லஷ்மிமா இறந்த பிறகு அவரோடு சேர்த்து , என்னைப் பெற்று விட்டபின் வேண்டாம்  என்று கோவிலில் அனாதையாக விட்டுச் சென்ற என் பெற்றவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற என் நான்காவது கனவையும் புதைத்து விட்டேன்.

எனக்கு கடவுள் அளித்த இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அதனால்தான் பூரணி நிவியிடம் கூட இதுவரை இந்த விவரங்களை சொன்னதில்லை.
                     ____________

ஊட்டியில் இருந்து திரும்பியதும் எங்கள் நண்பர்கள் அனைவரிடமும் அங்கே நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்லி  பேசி மகிழ்ந்தோம். இது என்ன மாயம்! மகிழ்ச்சியான நிகழ்வுகள் பற்றி நினைக்கும் போதும் பேசும்போதும் அது இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தருகிறதே. நான் இந்த கல்லூரி வாழ்வை என் வாழ்வின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது.

நான்கு ஆண்டுகள் முடியப்போகிறது.கல்லூரி வளாகத்தில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. எங்கள் மூவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டோம். கடவுள் எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வைத்தார். எங்கள் மூவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை கிடைத்தது.

ஆனால் நிவி அவள் அப்பாவின் அலுவலகத்தில் சில நிர்வாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதால் அவள் எங்களுடன் ஒரே கம்பெனியில் சேர முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் தவறாமல் சந்தித்து வந்தோம்.

யாரோ     (Completed)Where stories live. Discover now