சந்தேகம்

1.4K 71 4
                                    

சதீஷ் எல்லா டைரிகளையும் முழுதாக படித்து முடித்தார். லலிதா அவருக்கு காபியும் டிபனும் கொண்டுவந்தாள். "அக்கா எனக்கு பசிக்கவேயில்ல. மனசு தெளிவா இருக்கு. என்ன டைவர்ஸ் பண்ணனும் நினைக்கற ரோஸிய பத்தி நான் கவலபடபோறதில்ல. இனி எனக்கு நிவி மட்டும் போதும்" என்றார்

"அவசரப்படாதடா. அவ உன் மனைவி."

"இல்லக்கா. நான் ரொம்ப பொறுத்து தான் பார்த்தேன். அவங்க அட்டகாசம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. நான் பெற்ற பிள்ளைகள்தான். ஆனால் சரியில்லையே. ஏதோ புத்தி கெட்டு ஃபாரினில் தனியா இருந்தப்ப பிசினஸ் பார்ட்னரா இருந்த அந்த ரோஸிய கல்யாணம் பண்ணேன். ஆனா அவ கேரக்டர் சரியில்லையே. பசங்களையே என்னோடதில்லனு வாய் கூசாமல் சொல்றா. டைவர்ஸ் கேக்கறா. பலரோடு தொடர்பு வச்சிருக்கறா. அவளோ கலச்சர்  எனக்கு பிடிக்கல. பசங்களும் ஃப்ரீயா இருக்கணும்னு நினைக்கிறாங்க.
அவங்கள விட்டு விலகப்போறேன். நான் ரொம்ப தெளிவா முடிவு பண்ணிட்டேன். நிவிதான் என் மகள். அவள் சந்தோஷந்தான் என்  லட்சியம்."

பிறகு மனநிம்மதியுடன் அவரவர் வேலையைப் பார்க்கச்சென்றனர்.

இவ்வாறு அன்று நடந்த அனைத்தையும் என்னிடம் கூறினார்.

நான் அங்கிளைப்பார்த்து ஒரு சந்தேகத்தை கேட்க நினைத்தேன்.
ஆனால் கேட்க தயக்கமாக இருந்தது. என் மனநிலை புரிந்தவராக " உனக்கு இன்னும் என்ன குழப்பம்? தயவுசெய்து நீ பார்த்தது கேட்டது எதையும் நிவிகிட்ட சொல்லிடாத. அவ மனசொடிஞ்சி போய்டுவா. அவ எப்பவும் சந்தோஷமா இருக்கணும். பளீஸ்" என்று என்னிடம் கண்கலங்க கேட்டார்.
நான் மிகவும் பதட்டமடைந்தவளாக " அங்கிள் என்ன நம்புங்க. நான் நிச்சயமா சொல்லமாட்டேன். ஆனால் என் மனதில் இருக்கிற சந்தேகத்தை நான் கேக்கலாமா? நீங்க தீர்த்து வைக்க முடியுமா? நிவி உங்க மக இல்லனா அவ யாரோட மக? உங்களுக்கு பெரிய மனசு இருக்கப்போய்தான் இவள உங்க மகளா வளர்த்திருக்கீங்க. நீங்க ரியலிரொம்ப கிரேட். அது நீங்க உங்க மனைவிய எவ்ளோ நேசிச்சீங்கன்றத காட்டுது. நிவியோட அப்பா யாரோ?  ஆனா இந்த ஜென்மத்துல நீங்கதான் அவ அப்பா. ஷி இஸ் வெரி லக்கி. அதனாலதான் அவளுக்கு உங்க அன்பு கிடைச்சிருக்கு.
ஆனா நான் யாருமில்லாத அனாதை அங்கிள். பூரணியோட வீட்ல தான் அம்மா அப்பாவோட அன்பு எப்படி இருக்கும்னு உணர்ந்தேன். ஸ்கூல் முடிக்கிறவரைக்கும் ஆசிரமத்திலதான் வளர்ந்தேன். பிறகு யாரோ சில நல்லவங்க உதவியால காலேஜ்ல படிக்கிறேன். படிச்சி நல்ல வேலையில சேர்ந்து நிறைய சாம்பாதிச்சி இந்த ஆசிரமத்தில இருக்கிற எல்லாருக்கும் வேண்டிய உதவிகளை செய்வேன்" என்று கூறும்போதே அழுகை வந்து விட்டது. என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை.


"அழாத உஷா. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். உனக்கு வந்த ஜுரம் உன் மனச வீக்கா ஆக்கிடுச்சா. நீ இப்பிடியெல்லாம்
பீல் பண்ணி இதுவரை நாங்க பார்த்ததேயில்லையே." என்றபடி பூரணியும் நிவேதிதாவும் அறைக்குள் நுழைந்தனர்.

ஜுரம் சரியாயிடுச்சா என்றவாறு என்னை தொட்டுப்பார்த்தாள் பூரணி. என் கண்ணீரை துடைத்தாள் நிவி. நான் இன்னும் அதிகமாக அழுதேன். முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு அழுகையை அடக்கினேன். ஆனால் தேம்பல் நிற்கவில்லை. உடனே பூரணி" தெரியுமா உஷா இன்னிக்கு இந்த எஸ்டேட்ல நிவியோட ஸிஸ்டர்ஸ் ப்ரதர்ஸ் கசின்ஸ்னு அவ்ளோ பேரையும் பார்த்தேன். எல்லாரும் ரொம்ப க்யூட். ஆனா ரொம்ப கிட்ட வந்து என்ன கொஞ்சம் பயமுறுத்திட்டாங்க." என்றதும் நிவி " ஏய் பூரணி என்ன சொன்ன? குரங்கெல்லாம் என் ப்ரதர்ஸ் ஸிஸ்டர்ஸ் கசின்ஸ்னு சொல்றியா? உன்ன என்ன பண்றேன் பார்" என்று பூரணியை துரத்த ஆரம்பித்தாள். பூரணி ஸாரி ஸாரி என்று சொல்லிக்கொண்டே முன்னால் ஓடினாள். அவர்களைப் பார்த்து நானும் அங்கிளும் வயிறுவலிக்க நன்றாக சிரித்தோம். கடைசியில் நிவி பூரணியை பிடித்துவிட்டாள். அவளது அழகிய கன்னத்தை இவளது மென்மையான விரல்களால் கிள்ளிவிட முயன்றாள். ஆனால் பூரணி தன் இருகைகளாலும் கன்னத்தை மூடிக்கொண்டு" ஸாரி நிவி. அழுதுகிட்டு இருந்த உஷாவ சிரிக்க வைக்க தான் சும்மா அப்படி சொன்னேன். இவ்ளோ அழகான என் பரண்ட் உன்ன குரங்கோட கம்பேர் பண்ணுவேனா? "என்றவாறு என்னைப்பார்த்து கண்ணடித்தாள்.
"நீங்க ரெண்டுபேரும் எனக்கு பரண்ட்ஸா கெடச்சது நான் செஞ்ச புண்ணியம். கடைசி வரைக்கும் நாம இப்படியே அன்போட ஒத்துமையா இருக்கணும். உங்க ப்ரண்ட்ஷிப்
கிடைச்சபிறகு எனக்கு பேமிலியும் கிடச்சிடுச்சி. எனக்கு எதுன்னாலும் பாத்துக்க நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவல. இனி நான் அழமாட்டேன்." என்றேன் .
ஆமாம். எனக்கு அழுவது பிடிக்கவே பிடிக்காது.

                  *************
Expecting your valuable comments. Thank you for reading and voting. Please keep reading.

யாரோ     (Completed)Where stories live. Discover now