குழந்தை

1.3K 56 2
                                    

1995ஆம் வருடம் ஒருநாள் இரவு எட்டரை மணி .
அன்பு இல்லத்தின் வாசலில் ஒரு குழந்தை.
"மேடம் இந்த கொழந்தைய யாரோ வெளியில விட்டுட்டு போய்ட்டாங்க. பாவம் "

."கொழந்த அசையவே இல்லியே. உயிரோட இருக்கா பாருங்க"

ஒரு பெண் அந்தக்குழந்தையை தூக்கினார்

" பெண் குழந்தை. இதயத்துடிப்பு இருக்குது. ஆனால் பேச்சுமூச்சில்லாம ரொம்ப பலகீனமாக இருக்குதே. இப்படியே விட்டுட்டா செத்துப்போயிடும்."

"நான் டாக்டரை கூட்டிட்டு வரேன்" என்று ஒருவர் சென்றார்

இப்படித்தான் அந்தக்குழந்தை அன்பு இல்லத்திற்கு வந்து சேர்ந்தது.

டாக்டர் பரிசோதித்துவிட்டு  "கொழந்த ரொம்ப வீக்கா இருக்கு.
ஹார்ட்ல ஏதோ ப்ராப்லம் இருக்கறமாதிரி இருக்கு. நீங்க கொழந்தைய ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுங்க. அப்பதான் தரோவா செக்பண்ணி ட்ரீட்மென்ட் குடுக்க முடியும்" என்றார்.

அவர் டாக்டர் வர்கிஸ். இந்த ஹோம்க்கு மருத்துவசேவை செய்யும் சில டாக்டர்களில் அவரும் ஒருவர். மிகவும் கருணையுள்ளம் கொண்டவர்.நடுத்தர வயது. எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனே வந்து உதவுபவர்.

பிறகு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்து விட்டு " கொழந்தையோட ஹார்ட்ல ரெண்டு ஹோல்ஸ் இருக்கு. அது சரிபண்ணமுடியாது. பொழைக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். ட்ரிப்ஸ் போய்ட்டு இருக்கு. ஆனா மேக்ஸிமம் நாலு நாள்தான். பார்ப்போம். காட் இஸ் கிரேட். லெட்ஸ் ஹோப் பார் த பெஸ்ட்" என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்றார்.

யாரோ பெற்ற குழந்தைதானே என்று நினைக்காமல் அங்கிருந்த அனைவரும் அந்தக்குழந்தைக்காக வருந்தினர். அது பிழைக்கவேண்டும் என்று கடவுளை வேண்டினர்.

மறுநாள் டாக்டர் " இந்த குழந்தய பத்தி ஒரு பெரிய சர்ஜியன்கிட்ட பேசியிருக்கிறேன். அவர் வந்து பாக்கறதா சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம் "என்றார்.

யாரோ     (Completed)Where stories live. Discover now