அம்மா

1K 55 2
                                    

உஷா லஷ்மியின் அருகில் சென்று அமர்ந்தாள். லஷ்மி உஷாவின் கையைப்பற்றினாள். பிறகு மெதுவாக பேசத்தொடங்கினாள்.

லஷ்மி அன்பு இல்லத்திற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.
அவள் அடிக்கடி சென்று வரும் சிவன் கோவிலுக்கு சென்று மூன்று மாதங்கள் ஆகி விட்டதே. இன்று சென்று வரலாமா என்று யோசித்தாள். அந்தக் கோவிலில் வீற்றிருந்த ஆதிசிவனும் அகிலாண்டேஸ்வரியும் குழந்தை வரம் தருவார்கள் என்று மனதார நம்பியிருந்தாள். ஆனால் கட்டிய கணவனே கைவிட்ட பிறகு கடவுள் மீதிருந்த நம்பிக்கையையே இழந்து விட்டாள். என்ன தான் இல்லத்தில் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தாலும், ஒரு குழந்தை பிறந்திருந்தால் கணவனோடு சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாமே, என்ற ஏக்கம் அவள் மனதை வாட்டியது. அதனால் அந்தச்சிவனை நேரில் சென்று பார்த்து மனக்குறையை கொட்டி விட்டு வரலாம் என்று நினைத்தாள். நீலாவதி மேடத்திடம் சொல்லிவிட்டு கோவிலுக்கு கிளம்பினாள். பஸ்ஸில் உட்கார்ந்து செல்லும்போது கையில் குழந்தையுடன் ஒரு பெண் பஸ்ஸில் ஏறினாள். பஸ்ஸில் எந்த இருக்கையும் காலியாக இல்லை.
லஷ்மி அவள் எழுந்து அந்த இருக்கையில் அந்தப்பெண்ணை அமரச்சொன்னாள். அந்தப்பெண்ணும் நன்றி கூறிவிட்டு அமர்ந்தாள். அவள் மடியில் இருந்த குழந்தை லஷ்மியைப்பார்த்து சிரித்தது. அந்த அழகுச்சிரிப்பில் அவள் மெய்மறந்து மகிழ்ந்தாள்.

அவள் இறங்க வேண்டிய இடத்தில் பஸ் நின்றதும் இறங்கி கோவிலுக்கு நடந்து சென்றாள். கோவிலுக்குள் சென்று ஆதிசிவனையும் அகிலாண்டேஸ்வரியையும் தரிசித்தாள். அன்று கோவிலில் எந்த விசேஷமும் இல்லை என்பதால் கூட்டமில்லாமல் அமைதியாக இருந்தது. ப்ரதோஷ நாளாக இருந்தால் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்திருக்கும். லஷ்மி, பைரவர் சன்னதி எதிரில் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்தாள்.  "சிவபெருமானே என்னை அம்மா என்று அழைக்க எனக்கு ஒரு குழந்தையை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாயே, நான் அப்படி என்ன பாவம் செய்தேன்? உன்னையே நம்பியிருந்தேனே!" என்று எதிரில் இருந்த சிவலிங்கத்தைப்பார்த்தவாரே மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருந்தாள்.

யாரோ     (Completed)Where stories live. Discover now