மகிழ்ச்சிப்பூ

966 49 5
                                    

பூரணியின் அப்பா சொன்னது எனக்கு ஒன்றும் புரியவில்லை. திருதிருவென்று விழித்தேன். வெளியில் சுற்றும் முற்றும் எட்டிப்பார்த்துவிட்டு அங்கிள் என் கையைப்பிடித்து உள்ளே இழுத்துவிட்டு அறையின் கதவை தாளிட்டார். ஆண்டி அழுதுகொண்டே இருந்தார்கள். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஆண்டியின் அருகில் சென்று அமர்ந்தேன். அவர் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு "அழாதீங்க ஆண்டி. சந்தோஷமா இருக்கவேண்டிய நேரம் இது. ஏன் இப்படி அழறீங்க? ப்ளீஸ் ஆண்டி அழாதீங்க" என்றேன். "ப்ளீஸ் அங்கிள். என்ன ஆச்சினு விவரமா சொன்னா நான் எதனா பண்ணமுடியுமான்னு பாக்கறேன்" என்று அங்கிளிடம் கேட்டேன்.

"சொல்றேன்மா. பூரணி பிறக்கும் போது தனியா பிறக்கல. அவ ரெட்டைப்பிறவி. அவ கூடப் பொறந்த இன்னொரு பெண்கொழந்த பொறந்த அன்னிக்கே காணாமபோயிடுச்சு. யாரோ தூக்கிட்டு போயிட்டாங்க. நாங்க எவ்வளவோ தேடிப்பாத்தோம். எங்கயும் கெடைக்கவேயில்ல. போலீஸ் கம்ப்ளையிண்ட் கொடுத்தோம். எந்தப்ரயோஜனமும் இல்ல. நாங்க ரொம்ப மனசொடிஞ்சி போயிட்டோம். அப்போ எங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வந்த டாக்டர் "நீங்க இந்த நிலைல இருந்தா கைல இருக்கிற இந்த கொழந்தைய எப்படி வளப்பீங்க? இந்த கொழந்தைக்கு தான் ஒரு ரெட்டைப்பிறவி என்று எப்போதும் தெரியக்கூடாது. தன் கூடவே அம்மாவோட கருவில் ஒண்ணா இருந்த சகோதரியின் பிரிவு இந்தக் கொழந்தைய சைகலாஜிகலா ரொம்ப பாதிக்கும். எதையோ இழந்த இல்ல பரிகொடுத்த மனநிலை குழந்தையோட மனவளர்ச்சி உடல் வளர்ச்சி இரண்டையுமே பாதிக்கும். அந்தக் குழந்தைய தேடுங்க. கிடைக்கிற வரைக்கும் இந்த கொழந்தைக்கு எதுவும் தெரியவேண்டாம். பிரிஞ்ச கொழந்தைய நெனச்சி இந்த கொழந்தைய கவனிக்காம விட்டுடாதீங்க. காணாமல்போன கொழந்த திரும்ப கிடைக்கறப்போ எல்லாம் சரியாகிவிடும். நீங்க நம்பிக்கையோடவும் தைரியமாவும் இருக்க வேண்டியது முக்கியம்" என்று கூறினார். எங்களுக்கு அந்த கவுன்சிலிங் ரொம்ப உதவியா இருந்தது. பூரணிய நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும். அவளுக்கு ஒரு குறையும் வெக்கக்கூடாதுன்னு முடிவு செஞ்சோம். பேரலலா காணாமல்போன கொழந்தயையும் தேடினோம். நாங்க ரொம்ப நாளா விடாம தேடினோம். ஆனா கிடைக்கவே இல்லை. இவ தான் இன்னமும் அழுதுகிட்டே இருக்கா."

யாரோ     (Completed)Where stories live. Discover now