பயணம்

1.7K 80 2
                                    

பூர்ணிமாவின் வீட்டிற்கு சென்று அவளிடம் பேசலாம் என்று கிளம்பினேன். அவளிடம் அனைத்தையும் சொல்லாமா? வேண்டாமா? என்று குழப்பமாகவே இருந்தது. வீட்டின் வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு காலிங்பெல்லை அழுத்தினேன்.

கதவைத் திறந்து என்னைப் பார்த்து நிவேதிதா சத்தமாக சிரித்தாள். "பூர்ணி கரக்டா நீதான் வந்திர்க்றன்னு சொல்லிட்டா. நா நம்பல. சந்தேகமாதான் வந்து கதவ திறந்தேன். பார்த்தா நீதான்." என்றாள். "நீ எப்ப வந்த? நான் வீட்ல போரடிக்கிதேன்னு சும்மாதான் பூரணி கிட்ட பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்" என்று கூறிக்கொண்டே பூரணியின் அறைக்குள் நுழைந்தேன்.

பூரணிமாவின் வீடு டபுள் பெட்ரும் ஃப்ளாட். சிறியதாக இருந்தாலும்
மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும். ஹாலில் ஒரு மர சோஃபா செட், ஒரு டிவி, ஒரு ஷோகேஸ் அலமாரி இருக்கும். பூர்ணியின் அறையில் அவளது பொருட்கள் அனைத்தும் அதற்கென்ற இடத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

"ஹாய் வா உஷா நா நெனச்சேன். நீ கரக்டா வந்துட்ட"என்று கூறி பூர்ணி என்னை வரவேற்றாள்.

"அப்பா பர்மிஷன் குடுக்கவேமாட்டார்னு நினைச்சேன். இவ எப்படியோ பேசி பர்மிஷன் வாங்கிட்டா நாம எல்லாரும் நாளைன்னைக்கு ஊட்டிக்கு போறோம்."என்றாள் பூர்ணி.

பூர்ணியின் அம்மா எங்களுக்கு ஜூஸ் கொண்டுவந்தார்கள்.
"ஆண்டி நீங்க எது செஞ்சாலும் ரொம்ப டேஸ்டா சூப்பரா செய்றீங்க. பூர்ணி ரொம்ப லக்கி. நானும் உங்க பொண்ணா பொறந்திருந்தா ரொம்ப நால்லார்ந்திருக்கும்" என்று நிவி சொன்னதும் எனக்கு அவள் வீட்டில் கேட்டது நினைவுக்கு வந்தது.

"உங்க அப்பகிட்ட நாம எல்லாரும் வர்றதா சொல்லிட்டியா? அவர் ஓகே சொல்லிட்டார்ல? நாம எல்லாரும் ஊட்டிக்கு போக டிரஸ்ஸஸ் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிடலாமா?" என்றேன்.

மறுநாள் கொஞ்சம் ஷாப்பிங் செய்துவிட்டு ஊட்டிக்கு புறப்பட்டோம். நிவியின் அப்பா எங்களிடம் மிகவும் அன்பாக பேசினார். ஒரு தந்தையின் அன்பையும் அக்கறையையும் அவரிடம் உணர முடிந்தது. நிவியின் வீட்டில் கண்டது ஒரு கனவாகி விடக்கூடாதா என்று என் மனம் ஏங்கியது. அந்த நிகழ்வை மறந்துவிட வேண்டும். அவர்கள் பேசியதை ஒற்றுக்கேட்டது தவறு என்று தோன்றியது. என்மீது எனக்கே கோபம் வந்தது.அதனை மறைத்துவிடவும் மறந்துவிடவும் முடிவு செய்தேன்.

ஊட்டியின் அழகையும் ரம்மியமான சூழ்நிலையும் பார்த்ததும் மனதில் மகிழ்ச்சி மலர்ந்தது. நாங்கள் மூவரும் சிறுகுழந்தைகள் போல ஓடியாடி விளையடினோம். பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. கெஸ்ட் ஹவுஸுக்கு காரில் செல்லும்போது வழியில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே சென்றோம். ஒருவாரம் இங்குதான் இருக்கப்போகிறோம் என்று நினைக்கவே குதூகலமாக இருந்தது.

காரில் இறங்கி கெஸ்ட் ஹவுஸுக்கு உள்ளே சென்றோம். அது ஒரு அழகான பங்களா. டிரைவர், சமையல்காரர், சுத்தம்செய்பவர், தோட்டக்காரர் என நாலைந்து வேலைக்கார்கள் இருந்தனர். மாடியில் ஒரு அறையை எங்களுக்காக தயார் செய்து வைத்திருந்தனர். நாங்கள் கைகால் முகம் கழுவி ரிஃப்ரெஷ் செய்துகொண்டு கீழே இறங்கிவந்தோம். சுடச்சுட சாப்பாடு தயாராக இருந்தது. நல்லபசியுடன் இருந்ததால் நன்றாக சாப்பிட்டோம்.

நிவியின் போன் ஒலித்தது. எடுத்து பேசினாள் " ஆ நாங்கல்லாம் சாப்டோம். நீங்க சாப்பிடலையா? எங்க டேடி இருக்கீங்க" என்றாள் பிறகு "ஓகே டாடி நீங்களும் சீக்கிரமா வந்து ரெஸ்ட் எடுங்க" என்று போனைக் கட் செய்தாள்.

நாங்கள் அறைக்கு சென்று படுத்தவுடன் தூங்கிவிட்டோம்
தூங்கி எழுந்ததும் என்ன செய்தோம். அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

யாரோ     (Completed)Where stories live. Discover now