01

2.5K 98 37
                                    

"அனைவருக்கும் ஒன்று போல் தோன்றாது... ஆனால் என்றுமே தோன்றாமலும் போகாது...
எட்டும் பார்வையில் ஓர் எட்டாக்கனி...
என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்?"

"சூரிய உதயத்துக்கு இவ்வளவு அழகா உவகை குடுக்றியேம்மா" என்றும் போல் இன்றும் தன் அன்பு பேத்தியின் அழகு பேச்சில் சிக்குண்டு கிடந்தார் விஸ்வநாதன்.

"தாத்தா...அவ சொல்றதெல்லாம் உவகையா உங்களுக்கு?இங்க எம்.ஏ தமிழ் படிச்ட்டு விவசாயம் தான் செய்யவேன்னு முறுகிக்கிட்டு திரியுற பசங்க எத்தனை பேர் இருக்கறாங்க..அவங்கள கூப்பிட்டு கவிதை,விடுகதைன்னு சொல்லச்சொல்லி கேளுங்க. முடிஞ்சா பாராட்டா நம்ம நிலத்தை எழுதி வைங்க... சும்மா எப்போ பாத்தாலும் இந்தம்மா ஏதோ ரெண்டு வரி சொல்லிட்டாங்கன்னு மெச்சிக்கிட்டு இருக்கிறீங்க"

"டேய் படவா..விடிஞ்சும் விடியாததுமா என்ன என் பேத்திய வம்புக்கு இழுக்கற
எப்போவும் நான் அவளுக்கு தாண்டா சப்போர்ட். போடா வேலைய பாத்துகிட்டு"

"செல்லம் கொஞ்ச ஸ்டார்ட் பண்ணிட்டாரே...எனக்கும் ஆளிருக்கு...அப்பத்தா...எங்க இருக்க"என்றபடியே கொள்ளைப்புரத்தை நோக்கி ஓடினான் நம் நாயகியின் அண்ணன் சித்தார்த் பார்த்திபன்.

விஸ்வநாதன்-அமலா தம்பதியின் ஒரே தவப்புதல்வன் பார்த்திபன். தமிழ்நாட்டின் மொத்த அழகையும் பறைசாற்றும் கோவை மாநகரில் எழிலுற பருத்தி,பஞ்சாலை தொழிற்சாலையிலிருந்து கோவை குடிமக்கள் மட்டுமல்லாது நாடு முழுக்க மக்கள் அணிந்து அழகுபார்க்கும் பொன்னடையாய் அது மாறும்வரை,அனைத்து பொறுப்புகளையும் பேணிக்காக்கும் தி சில்வர் ஸ்டெம்ஸ் டெக்ஸ்டைல்ஸ் சாம்ராஜ்யத்தின் அதிபதி.

பொள்ளாச்சியின் அழகுக்கு இணையாக செந்தில்நாதன்-குமுதவள்ளி தம்பதி பெற்றெடுத்த இரண்டாவது செல்வி ரோஹிணியை பெற்றோர் சம்மதத்துடன் இனிதே மணம் புரிந்து மனம் நோகாமல் ஊடல்-கூடல்கள் நிறைந்த இல்லற வாழ்வுக்கு சொந்தக்காரர். மனையிவின் கூர்மையறிந்து,சரிசமமாக தொழிலில் இடம் வகுக்க உதவி செய்தவர்.இவர்களின் நல்ல இல்வாழ்வின் பரிசாக இவர்கள் பெற்றெடுத்த இரு முத்துக்கள் தான் நம் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் இருவர்.

தன் தந்தையின் பெயரை பின்னால் சேர்த்துக்கொண்டதாலோ என்னவோ, இருவருக்கும் அவ்வளவு உருவ ஒற்றுமை.விஸ்வநாதனை பொருத்தமட்டில்
சித்தார்த் சிறு வயது பார்த்திபனே தான்.பெங்களூர் மற்றும் பாரிசில் தனது யூஜி ,பிஜி படிப்புகளை முறையே கற்றுத்தேர்ந்து இதோ தி சில்வர் ஸ்டெம்ஸ் டெக்ஸ்டைல்சின் அடுத்த தலைமுறை முதலாளியாக களம் இறங்க காத்திருக்கும் இருபத்தைந்து வயது திறமைவாய்ந்த வாலிபன். நிறைகள் இருக்கும் இடத்தில் குறைகள் இல்லாமலா போய்விடும்!இவன் மனதினுள் யாருமறியா ரகசியங்கள் தான் எத்தனையோ?

இவன் தங்கை ,நம் நாயகி ஸ்ருதி இவனுக்கு நேர்மாறான குணம் கொண்டவள். மிகவும் அமைதி.தன் தாய்வழி பாட்டி குமுதவள்ளியிடமிருந்து அமைதிக்கான அத்தனை சாரம்சமும் அழகுற பெற்றவள். தங்கையை போல் தன்னையும் ஏன் இவ்வளவு அழகாக பெற்றெடுக்கவில்லை என்ற கோபம் சித்துவிற்கு சிறு வயது முதலே உள்ளது!!பெண்களுக்கே உண்டான நளினம், அழகு ஆண்மகனுக்குள் எவ்வாறு புகும் என்ற பெற்றோர் அறிவுரை செவிடன் காதில் சங்கு ஊதியதாய் போனது.பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றில் கைதேர்ந்தவள் நம் நாயகி.அனைவரையும் மகிழ்விக்குமேனில், தன்னை வருத்திக்கொண்டாவது அக்காரியத்தை செய்து முடிப்பவள்.

தன் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத மருத்துவ படிப்பை கையில் எடுத்து,இதோ நான்காம் வருடதில் காலடி எடுத்து வைத்துவிட்டாள்.நேரம் வரும் பொழுது பூனையும் புலியாய் மாறும் என்பதைக்கேற்ப, நம் ஸ்ருதியையும் தீயாய் மாற்ற ஓர் ஜீவன் லண்டினிலிருந்து விமானத்தில் பறந்து வந்துகொண்டிருந்தது....






Note:இக்கதையின் updates இரு வாரங்களுக்கு ஒரு முறை வந்துவிடும். பிடித்தால் vote செய்யுங்கள்😊

என்கண்ணிற் பாவையன்றோ...Where stories live. Discover now