14

2.3K 50 39
                                    

அறையின் கதவு திறக்கும் ஓசை கேட்டு திரும்பின இரு உருவங்கள்.

"வாங்க வாங்க... உங்களுக்காகத்தான் இவ்ளோ நேரமா வெய்ட் பண்ணிட்ருந்தோம்.",என்றபடியே திறந்திருந்த கதவை சாற்றினான் அன்றைய நாளின் நாயகன் தயா.

உள்ளிருந்த இன்னொருவரை பார்த்து சிறிது அதிர்ந்தாலும்,பின் தெளிந்து விஷாலை முறைத்து பார்த்தான் அர்ஜுன்.


அது வேறு யாரும் அல்ல...தயாவின் ஆருயிர்க்காதலி லக்ஷிதா தான்.


"என்ன மிஸ்.லக்ஷிதா இன்னிக்கு ,இல்ல இல்ல இப்போதா நிச்சயமே முடிஞ்சுது,அதுக்குள்ள எங்கள பாக்கணும்னு எனக்கு போன் பண்ணி கூப்ட்ருக்கிங்க.என்ன ஆச்சு தயா ஏதாச்சு பிரச்சன பண்றாரா?",-விஷால்


"அதெல்லாம் போக போகத்தானே தெரியும்,லவ்வரா இருந்தப்போ இருந்தவரைக்கும் சரி...கல்யாணம் ஆகிட்டா எப்படி மாறுவார்னு யாருக்கு தெரியும்",சிரித்துக்கொண்டே தயாவிடம் செல்ல குட்டொன்றை பெற்றாள் லக்ஷிதா.


"சரி சரி ,பர்ஸ்ட் உங்கள தொந்தரவு பண்ணறதுக்காக எங்கள மன்னிச்சிருங்க...நான்தான் உங்கள பாக்கணும்னு இவர்கிட்ட அடம்பிடிச்சேன்.அதுவும் இன்னிக்கே..",என்று கூறி நிறுத்தினாள் லக்ஷிதா.


"இன்னிக்கே வா!என்னாச்சு லக்ஷிதா ?எங்க  மேல ஏதாவது கோபமா என்ன?நம்ம நேருக்கு நேர் மீட் பண்ணி சரியா பேசினது கூட இல்லையே!அஜ்ஜு,உனக்கு பர்சனலா லக்ஷிதாவ தெரியுமா என்ன?",-விஷால்.


அர்ஜுன் எதுவும் கூறாமல் இருக்கவும் லக்ஷிதாவே தொடர்ந்து,"விஷால் ப்ரோ, என்ன முதல்முதல்ல பொண்ணு பாக்க வந்தது அர்ஜுனோட அத்தை பையனுக்காக தான்.அந்த அன்னைக்கு நா அர்ஜூன பாத்திருக்கேன்.நீங்களும் மைண்ட் ல வெச்சருக்கிங்க தான அர்ஜுன் ப்ரோ?"


"ஹான்.. ஐ டூ ரிமெம்பர் யு.ஆனா அதெல்லா முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சே லக்ஷிதா...தேஜ்க்கும் வேற இடத்துல பொண்ணு பாத்து செட் ஆகிற மாதிரி தா இருக்கு.இப்போ எதுக்கு அதை பத்திலாம் பேசிட்டு"-அர்ஜூன்


என்கண்ணிற் பாவையன்றோ...Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin