03

1.1K 54 14
                                    

"சீக்கிரமா கெளம்புங்க, இப்போவே லேட்..பொண்ணு வீட்டுக்காரங்க நல்ல நேரம் தப்புனா ஏதாவது ஏடாகூடமா நெனச்சுக்கபோறாங்க"நடுமுற்றத்திலிருந்து குடும்பத்தார் அனைவரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்தார் சாரதி, சரண்யாவின் ஒரே அண்ணன். தங்கையை டாக்டராக்குவதில் பெரும் உழைப்பு காட்டியவர். தந்தை இறந்த துயரிலும், தங்கைக்கும் தாய்க்கும் தகுந்த சமயத்தில் பக்கபலமாக திகழ்ந்தவர்.தங்கைக்கு சிறப்பான முறையில் மணமுடித்துவிட்டு தாயின் ஆசைக்கேற்ப ஜானகியை திருமணபந்தத்தில் கைகோர்த்து, தேஜஸ் என்னும் செல்வனை மகனாய் பெற்றவர்.

தேஜஸ்,பெயருக்கேற்றாற்போல் முகத்தில் எப்போதும் தேஜசோடு வலம் வருபவன். ஜானகியின் வீட்டில் அவர் ஒரே பிள்ளையாதலால்,சரண்யா அத்தை மட்டுமே நெருங்கிய ரத்த பந்தம்.அவன் வீட்டில் தனியாளாய் இருக்கப்பிடிக்காமல் அணுவோடும் அர்ஜுனோடும் தான் ஒட்டிக்கொண்டே திரிவான்.இவனைப்பற்றி போகப்போக தெரிந்து கொள்வோம்.

அர்ஜுனுக்கும் தேஜஸுக்கும் ஒரே வயதுதான் வித்தியாசம், எனினும் இருவரும் உற்ற தோழர்களாவர். அணுவிற்கு திருமணம் செய்து அனுப்பியாயிற்று...அடுத்து வரிசையில் நிற்கும் தேஜசிற்கு தான் இந்த திருமண  அலப்பறையின்  முதற்படி...அதாவது பெண் பார்க்கும் படலம்.

தூரத்து உறவினர் மூலம் வந்த வரன் இது.திருமணத்திற்கு இப்போது அவசரமில்லை என்றாலும் வரும் வரனை தட்டிக்கழிப்பானேன் என செய்முறையில் இறங்கிவிட்டனர் இரு வீட்டாரும்.

"மச்சான்,தேஜஸுக்கு வேஷ்டி கட்ட இஷ்டமில்லையாமா.சோ கம்பெல் பண்ணாதீங்க அவன் பான்ட் ஷிர்ட் போட்டுக்கட்டும்.",மருமகனுக்கு வக்காலத்து வாங்கியபடியே வண்டி சாவியை எடுத்துக்கொண்டு வந்தார் முரளி.

"என்ன மாப்பிள்ளை, அவன் சிபாரிசு பண்ண சொன்னானா?காலேஜ் கல்சுரல்ஸ் அப்போ மட்டும் கலர் கலரா
கட்டிட்டு சுத்துனாரே துரை, இப்போ என்னாச்சாமா அவர்க்கு?"-சாரதி.

"மாமா , அது வாலிபவயசு"-அர்ஜீன்.

"அப்போ இது என்ன வலிப்பு வர வயசா?"-சாரதி.

"அண்ணி, மாமனும் மருமகனும் வாய்க்கால்சண்டைய ஆரம்பிச்சுட்டாங்க...வாங்க நாம போலாம்.அவங்க கோர்ட்க்கு போய் பஞ்சாயத்து பண்ணிட்டு வரட்டும்.",தட்டுகளை சரிபார்த்து வண்டியில் அடுக்கச்சென்றார் ஜானகி.

"சரி சரி கெளம்பலாம் எல்லாரும், நல்ல நேரம் வர்றதுக்கு முன்னாடி" தான் சொன்ன வரியை தன்னையே பார்த்து கூறும் அர்ஜூன் மேல் எப்போதுமே சாரதிக்கு தனி பாசம் தான்.யாருடனும் மிகவும் ஒட்டிப்பழகாத அர்ஜுனுக்கும் தாய்மாமனே தன் உணர்ச்சிகளின் வடிகால்.

குடும்ப சகிதமாக இரண்டு கார்களில் பெண் வீட்டை நோக்கி பயணப்பட்டனர் முரளி வீட்டார்.

யாரை பெண் பார்க்க போகிறார்கள்?

பெண்ணின் பெயர் என்ன?

எப்படி இருப்பாள்?என அனைவருக்கும் தெரியும்,அர்ஜுனையும்  யுவியையும் தவிர.பெண் பற்றி கூறுகையில் இவர்கள் தொழில் பேச்செடுத்து வேறிடம் செல்ல முனைந்ததே காரணம்.

"நேரில் பார்த்தால் தான் சுவாரஸ்யம் இருக்கும்... என் தேஜஸ்க்கே தேஜஸ் சேர்க்க வரவங்கள நேர்ல பாத்தாதான் நான் ஒத்துப்பேன்" என்ற அர்ஜூனின் வசனம் வேறு!!

ஆனால் அவனுக்கு தெரியாதே... அவர்கள் பயணம் முடியும் இடம்தான் இவன் மறுவாழ்வு தொடங்கும் இடமென்று...

அர்ஜுன்.... காதலால் கட்டுண்டு கிடப்பவனில்லை இவன்...கன்னிகளை பார்த்து கிறங்குபவனும் இல்லை இவன்.... தாய், அக்கா என பெண் சொந்தங்கள் சூழ அளவுக்கதிகமான அடக்கத்தோடு வளர்க்கப்பட்டவன் இவன்.... சில நாட்களாக காட்டும் ஒதுக்கமும், சோகமும், அனைவர் கண்ணிலிருந்தும் தப்பித்தாலும்,தாய்மாமன் கண்டுகொண்டார்.கேள்வி எழுப்பாமல் அவனாக சொல்ல காத்திருக்கிறார் பெரியவர்.சில விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வயதினரிடம் கூற முடியாதல்லவா?சாரதியின் நம்பிக்கை பொய்க்குமா?பார்க்கலாம்....

தேஜஸுக்கு பார்க்கப்போகும் பெண் யார்?இருவருக்கும்  ஒருவரையொருவர் பிடிக்குமா?பெண் வீட்டிலும் தேஜஸை ஏற்றுக்கொள்வர்களா?


அர்ஜுனுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்.....

என்கண்ணிற் பாவையன்றோ...Where stories live. Discover now