08

899 54 37
                                    

சென்னை

முதன்முதலில் தந்தையின் நேரடி நிழலை எதிர்பாராமல் தன் சுயத்தை நம்பி ஒரு கம்பெனி காண்ட்ராக்ட் விஷயமாக சென்னையின் ஒரு பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீட்டிங்கில் அமர்ந்திருந்தான் சித்து.

25 வயது கம்பீரமும்,ஆண்மையும் அவன் அழகுக்கு அழகு சேர்த்தது. பெற்றோரிடம் ஆசி பெற்று வந்தாலும், முதல் நாள் கல்லூரி அனுபவம் போலே உணர்ந்தான்.தந்தையுடன் நிறைய மீட்டிங்குகளுக்கு சென்றிருந்தாலும் ,அவையை தனியே மேற்கொண்டு எவ்வித அனுபவமும் இல்லாததே காரணம்.

மீட்டிங் ஹால் இன்னும் திறக்காத காரணத்தினால் ஹோட்டலின் ரிசெப்ஷன் பகுதியில் அமர்ந்திருந்தான்.

நெஞ்சத்து படபடப்பை அடக்க இரு குவளை மினரல் வாட்டர் அவன் தொண்டைக்குழிக்குள் இறங்கின.

அப்போது....

அவன் பின்னிருந்து ஒரு குரல்...

"சார்,அந்த வைட் கலர் ஸ்கோடா உங்க கார் ஆ?"

"ஆமா, ஏன் கேக்கறிங்க?"-சித்து

"இல்ல,பாக்க ரொம்ப அழகா இருந்துச்சு அதான் அத திருடிட்டு போலாம்னு.... "

"ஆஹான்...நீங்க உங்க பென்ஸ் சாவி என்கிட்ட குடுத்துட்டு தாராளமா எடுத்துட்டு போங்க...நீங்க..இங்க என்ன பண்றீங்க?"-சித்து

"பார்ட்னர் ஒருத்தர் வரேன்னு சொன்னாரு.... கரெக்ட் டைம்க்கு வருவாரு னு நெனச்சேன்.இப்டி இவ்ளோ சீக்கிரமா வருவாரு னு தெரியல.",என்றவாறே முன்னேறி சித்துவை அணைத்தான் அந்த குரலுக்கு சொந்தக்காரனான அர்ஜுன்!

"ஹாஹா.... அட போங்க அர்ஜீன்... நீங்க வேற.. நான் ரொம்ப நர்வசா இருக்கேன்.நீங்க கூட இருக்கீங்க ன்ற தைரியம் தான் என்ன காப்பாத்தனும்",என்றவாறே அணைப்பிலிருந்து விலகினான்.

தன் பயத்தை உணர்ந்தே, அதிகம் பேசி பழகாவிடினும், ஒரு நல்ல நண்பனாய் ,விளையாட்டாக பேசி,அணைத்தும் ஆறுதல் படுத்த முயன்ற அர்ஜுனின் மேல் மரியாதையும், நட்பும் துளிர்விட்டது.

என்கண்ணிற் பாவையன்றோ...Where stories live. Discover now