05

1K 49 33
                                    

"டேய்,இங்க எவ்ளோ வேலை இருக்கு.முன்னாடி போர்டிகோ க்ளீன் பண்ணிட்டங்களான்னு பாக்கணும்,பூ வாங்கிட்டு வர சொன்ன கருப்பையன்ன இன்னும் காணோம், என்ன ஸ்வீட் வாங்கிறதுன்னு இன்னும் முடிவே பண்ணல...நீங்க ரெண்டு பேரும் என்னடான்னா மேல போய் அரட்டையடிச்சிகிட்டிருக்கிங்க...அவ கூட பரவால்ல பொண்ணு பாக்க வர  டென்ஷன் ல இருப்பா உனக்கென்னடா...வந்து ஹெல்ப் பண்ணலாம்ல",என அவனை கத்திக்கொண்டிருந்தார் அவன் தாய்.

"ரோஹி,அவ மட்டும் தனியே மாடில என்ன பேசுவா..அதான் இவன் கூட பேச கம்பனி குடுக்க போய்ருப்பான்
அதுக்கு ஏன் புள்ளைய கத்துற...என்ன வேலை ஆகணும்னு சொல்லு...உன் அண்ணன் மகளுக்குக்காக நான் பண்றேன்.",அவர் கணவர்.

"பையனுக்கு ஒண்ணுனா வந்திருவீங்களே... சரி சரி வாங்க என்ன பண்ணணும்னு சொல்றேன்"

"சும்மா பேச்சுக்கு சொன்னா அதையே புடுச்சிட்டாளே",முனகியபடியே பின் சென்றார்.

இவன் இதழில் பூத்த சிரிப்பு தொலைபேசியின் சிணுங்களில் நின்றது.

"என்ன சார்,அத்தை பொண்ண பொண்ணு பாக்க வராங்கலாமே...எனக்கும் அவ அத்த பொண்ணு தான...வயசுல சின்னதுனால என்னை கண்டுக்கலேல"-அந்தப்பக்கம் கோபம் தெறித்தது.

"ஏய் லூசு,உன்ன யாரு கண்டுக்காம விட்டா?ரெண்டு நாளுக்கு முன்னாடியே தெரியும்ல.எங்க,இவ்ளோ பேசுறவ அங்க உன்னோட இன்டெர்னல்ஸ விட்டுட்டு இங்க ஓடிவா பாப்போம்",தெனாவேட்டாக இங்கிருந்து பதில் சென்றது.

"அச்சோ அதெல்லாம் முடியாது.நிச்சயம் வரைக்கும் போனா வேணா லீவ் போடறேன். சும்மாலாம் முடியாது.",பேசியது சாட்சாத் நம் ஸ்ருதியே தான்!!!

"அப்பறமென்ன வாய் பேசுற பெரிய மனுஷி மாதிரி. மதியம் இன்டெர்னல்ஸ் இருக்குல்ல, போய் படி.எப்படியும் இது கேன்சல் ஆகிடும். நாளைக்கு என்னனு சொல்றேன்.",இந்த இவன்----நம் சித்து!!!

"அண்ணா என்ன சொல்றே... வீட்ல தயா அண்ணா மேட்டர் தெரிஞ்சுருச்சா?",பெரும்குரலெடுத்து வந்தது அடுத்த கேள்வி.

என்கண்ணிற் பாவையன்றோ...Where stories live. Discover now