04

1.1K 52 24
                                    

"மாமா அப்போ நீங்க என்ன கட்டிக்க மாட்டீங்களா?" என்ற கேள்வியில் ஸ்தம்பித்து நின்றான் அவன்.

"என்ன சொல்ற நீ?நான் எப்படி உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியும்?உளராம போய் வேலைய பாரு"-அவன்.

"சின்ன வயசலேர்ந்து நீங்கதான் எனக்குன்னு ஆசைய வளத்துட்டேன்.இப்போ போய் கண்டவங்க முன்னாடி கடை பொம்மை மாதிரிலாம் என்னால நிக்க முடியாது.எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உங்க கூடத்தான் மாமா."-அவள்.

மாமா என்ற அழைப்பிலேயே அதிர்ச்சியுற்றவன்,இவளது இந்த பேச்சுக்கு மயக்கம் போடாதது தான் குறை.

"அடியேய்,உன் மனசுல என்ன பிளான் வெச்சுருக்க நீ?இன்னிக்கு வர்றவங்களை பிடிக்கலயா உனக்கு?இல்ல.."சந்தேகத்துடன் வினவும் அவனைப்பார்த்து முகம் இறுக முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டாள் அவள்.

"ஏய் கதவை திற அம்மணி...மொட்டமாடி கதவை எதுக்குடி சாத்தி வெச்சருக்க?தம்பி உன்கூடத்தான இருக்கு?ரெண்டு பேரும் வெரசா வாங்க தங்கங்களா...மாப்பிளை வீட்டுக்காரங்க வர்றதுக்குள்ள உன்னை ரெடி பண்ணனும்னு உங்க அம்மாளும் அத்தையும் கத்திக்கிட்ருக்காங்க"-அமலா பாட்டி கத்திக்கொண்டிருந்தார்.

"தோ அப்பத்தா வந்துட்டே இருக்கோம்"-வாசலை நோக்கி அவன் ஓட எத்தனிக்க,எந்த அசைவுமின்றி நின்றுகொண்டிருந்த அவளை பார்த்து துணுக்குற்றான்.

"ஏய்,விளையாடாத டி...உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் நமக்குள்ள அந்த மாரிலாம் நடக்க நாமளே ஒத்துக்க மாட்டோம்னு...சின்ன வயசலேர்ந்து எவ்ளோ க்ளோஸா இருந்தோம் நம்ம. நா வெளியூர் போனப்பறோம் இந்த அத்த பையன மறந்துடேல்ல.. என்னடி பிரச்சனை?பிடிக்கலேன்னா வீட்ல பிடிக்கலேன்னு சொல்லு. உன் இஷ்டத்தை மீறி அத்தை மாமா என்ன பண்ணிற போறாங்க?நடுல எதுக்குடி என் தலைய உருட்டற?" என கேட்டுக்கொண்டே சந்தேகத்துடன் அவள் முகத்துக்கு நேரே சென்று நின்றவன் அவள் திருட்டு முழியை கவனித்தபடியே,

"அதான் அதான்...சொன்னமாறியே இந்த அத்தை பையன மேடம் மறந்துட்டீங்க.உங்க லவ் மேட்டர் பத்தி கூட சொல்ல யோசிக்ரிங்க இல்ல...ஆனா கல்யாணத்தை நிப்பாட்ட நான் அத்தை பையனதான் கட்டிக்குவேன்ணு ட்ராமா பண்ண ரெடி ஆகிட்டீங்களாகும்?அது தெரிஞ்சு இந்த ஏற்பாடு நிக்கணும்,வீட்ல குழப்பம் வரணும்,அந்த கேப் ல லவ்வர எனக்கு இன்ட்ரோ குடுத்து, நா பூவே உனக்காக விஜய் மாரி கல்யாணத்த நிப்பாட்டி உங்கள சேத்து வைக்கணுமோ?",தெளிவான ஏற்ற இறக்கத்துடன் தன் மனதை படித்து அப்படியே ஒப்பித்தவனை கண்டு ஆச்சர்யம் இல்லை அவளுக்கு.

என்கண்ணிற் பாவையன்றோ...Where stories live. Discover now