07

912 53 27
                                    

சூரியனும் சந்திரனும் யாருக்காகவும் காத்திருக்காமல் தத்தமது சுழலும் பணியை செவ்வனே செய்ய,கண்கொட்டும் வேகத்தில் பறந்தன நாட்கள்.

முரளி விளையாட்டாக பார்திபனின் கம்பெனியில் பார்ட்னெர்ஷிப் பற்றி வீட்டில் பேச,பின் அது நல்ல யோசனையாகவே தோன்ற,அதை மகனுக்கு தெரியப்படுத்துமுன் அர்ஜுனே அவரிடம் தன் கம்பெனியில் அவர்கள் பார்ட்னெர்ஷிப் வைப்பார்களா என கேட்டு ஆச்சர்யப்படுத்தினான்.

"அர்ஜுன்,மூணு வர்ஷத்ல இவ்ளோ நல்லா டெவலப் ஆன கம்பெனிக்கு யார் தான்டா பார்ட்னெர்ஷிப்க்கு அக்ஸப்ட் பண்ண மாட்டாங்க?அதெல்லாம் ட்ரை பண்ணு, தே நோ அஸ் அல்ரெடி...உனக்கும் வேற ஒருத்தரோட மாஸ்டர் ட்ரிக்ஸ் தெரிஞ்சுக்க சான்சா இருக்கும்.",என நம்பிக்கையூட்டினார்.

பார்த்திபன் மேல் அர்ஜுனுக்கு முதல் நாள் பார்த்தவுடனே மிகுந்த மரியாதை வந்துவிட்டது.சிறு வயதிலேயே இவ்வளவு சுறுசுறுப்பான இளைஞனை யாருக்குத்தான் பிடிக்காது?

இரண்டு வாரங்களாக அவர்கள் டெக்ஸ்ட்டைல் இண்ட்ஸ்ட்ரியையும் அர்ஜுனுடைய கம்பெனியையும் கம்பேர் செய்து பார்த்ததில் அவர்களுடயதில் பாதி தூரம் கூட இவனுடைய உழைப்பு எட்டாதது போல் இருந்தது.ஆனால் இவனுடையது புதிய முயற்சி ஆயிற்றே...தந்தையின் நிழலில் நிற்காமல் சொந்தமாக ஆரம்பித்தது.மூன்று வருடங்களிலேயே எவ்வாறு மிகப்பெரிய உயரத்தை எட்ட முடியும்?அவ்வளவு பெரிய கம்பெனி இவனுடன் பார்ட்னெர்ஷிப் வைத்துக்கொள்வர்களா என்று இவனுக்கே சந்தேகம் எழுந்தது.ஆனால்,அவர்களிடமிருந்து இவன் நிறைய கற்றுகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.கேட்டு நிரகரித்துவிட்டால் சங்கடமாகிடும்... தந்தையிடமே ஆலோசனை கேட்போமென தந்தையிடம் விரைந்தான்.அவரது விளக்கத்தில் ஓரளவு சமாதானமடைந்தான்.முரளியே பார்திபனிடம் உரையாடி அர்ஜுனுக்கு அந்த வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தார்.

இரண்டு மாதங்களில் "தி சில்வர் ஸ்டெம்ஸ்" இல் அர்ஜுனின் "கிரே கிளவுட்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்"உம் மைனாரிட்டி பார்ட்னராக இணைந்தது.

என்கண்ணிற் பாவையன்றோ...Where stories live. Discover now