உன் பார்வை ஒன்றே போதும் அன்பே....

348 7 1
                                    

மதுமிதா மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் அவன் வேலைப்பளு காரணமாக தான் சொல்கிறான் என்று அவள் மனதைத் தேற்றிக் கொண்டாள் ஆனால் அவள் மனம் சமாதானம் அடையவில்லை மனதில் ஒரு முலையில்  குழப்பம் இருந்து கொண்டே தான் இருந்தது ஆனால் அத்தனை குழப்பங்களையும் ஒதுக்கிவிட்...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

மதுமிதா மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் அவன் வேலைப்பளு காரணமாக தான் சொல்கிறான் என்று அவள் மனதைத் தேற்றிக் கொண்டாள் ஆனால் அவள் மனம் சமாதானம் அடையவில்லை மனதில் ஒரு முலையில்  குழப்பம் இருந்து கொண்டே தான் இருந்தது ஆனால் அத்தனை குழப்பங்களையும் ஒதுக்கிவிட்டு அடுத்து வரும் சடங்கிற்கு ஆயத்தமாக தொடங்கினாள்...

      அன்று இரவு  சுதா தன் மருமகளை அலங்காரம் செய்து  கொண்டிருந்தார்..
மது ஆதவ் ரொம்ப கோவக்காரன் அவன் கோவத்தை பொருதுகோடா  கண்ணா ஆனா அவன்  ரொம்ப நல்லவன் என்ன சில  அறிவுரைகளை  கூறினார்.
மதுவை முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்ட  அறைக்கு  அனுப்பி வைத்தார் சுதா...

இதற்கு முன் அவனுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் ஆதவ் வை கட்டாயப்படுத்தி அந்த அறையில் விட்டு வந்தார்...

சுதாவிற்கு நன்றாக தெரியும்  ஆதவ் மிகவும் கோபமாக இருக்கிறான் என்று அவரால் என்ன செய்ய முடியும் எல்லாவற்றையும் அந்த இறைவனிடத்தில் விட்டு விட்டாள்
   
எது நடந்தாலும்  அது நன்மைக்காகவே இருக்க வேண்டும் என்று கடவுளிடம் மனமார  வேண்டிக்கொண்டார்....

     
மதுமிதா அந்த அறையினுள் சென்றவுடன் மதுமிதாவின் கண்களோ தன் மன்னவனை  காண ஆவலாய் தேடிக்கொண்டிருந்தது ஆனால் அவனோ  லேப்டாப்பை பார்த்துக்கொண்டு அவன் வேலையை மும்முரமாக செய்து கொண்டிருந்தான்..

        மது வருவதை பார்த்து தன் லேப்டாப்பை மூடி விட்டு அவள் பேச இடமளிக்காமல் அவனே பேசத் தொடங்கினார்.
உன்கிட்ட பேசணும் தான் நான் வைட்  பண்ணிக்கிட்டு இருக்கேன்...
        
நான் சொல்ற விஷயத்தை நீ எப்படி எடுத்துபானு எனக்கு தெரியலை ஆனால் இதுதான் உண்மை
அவனின் இந்த புதிர் பேச்சை பார்த்து மதுவிற்கு கொஞ்சம் குழப்பமாக  இருந்தாலும் அவன் பேசுவதை அனைத்தையும் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள்... மேலும்  ஆதவ்  பேச்சு தொடர்ந்தது
     எனக்கு இந்த கல்யாணத்தில் துளியும் விருப்பமில்லை என் அம்மா கட்டாயப்படுத்தி தான் இந்த கல்யாணத்தை பண்ணினாங்க  எனக்கு காதல் கல்யாணத்து மேல ல  விருப்பமும்  இல்ல நம்பிக்கையும் இல்லை. இதையெல்லாம்  சிறிதும் எதிர்பார்க்காத மது  சிலையாய் உணர்ச்சியற்று நின்றாள்..
         உனக்கு ஒரு விஷயம் தெரியுமா எனக்கு உன் பேர் என்னன்னு கூட   தெரியாது தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை  இந்த  வாக்கியத்தை கேட்ட  மதுமிதா முழுவதுமாக அதிர்த்துவிட்டால்...
        என்னுடைய பெயர்  கூட தெரியாதாம் தெரிந்துகொள்ள  வேண்டிய அவசியம் கூட இல்லையாம்.. இவருக்கு...
நான் யார் இந்த வீட்டிற்கு ..
எனக்கும் இந்த வீட்டிற்கும் என்ன உறவு என்ற கேள்விகள் அவள்  மனதினை துளைத்துக் கொண்டிருந்தது....
போதும் நிறுத்துங்கள் ஆதவ் இதுல  உங்க ஒருத்தரோட வாழ்க்கை மட்டும் தான் அடங்கி இருக்கா என் வாழ்க்கையும் தான்அடங்கி இருக்கு அத பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலயா நீங்க இல்லை ஏன் யோசிக்கணும் னு  நினைத்து விட்டுட்டீங்களா....  அவள் முதல் கேள்வியை அவனிடத்தில் தொடுதல்... அத பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று தன் தாயின் மேலிருந்த கோபத்தை அனைத்தையும் மதுவின் மீது திருப்பினான்
  
நீங்க இப்போ சொன்னதை  கல்யாணத்துக்கு முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாமே... நானும் சொல்லணும்னுதா முயற்சி பண்ணேன் ஆனா முடியல...
என் அம்மா என்கிட்ட ஒரு சத்தியம் வாங்கினாங்க கல்யாணத்துக்கு முன்னாடி உன் கிட்டயோ  இல்ல உன் குடும்பதுகிட்டயோ நான்  பேச கூடாதுன்னு..

உன் பார்வை ஒன்றே போதும் அன்பே... Where stories live. Discover now