உன் பார்வை ஒன்றே போதும் அன்பே....

260 6 1
                                    

உள்ள வா மது....

உம்....... ஓகே  சார்...
இதுவரை அவனை சாதாரண உடையில் அவள் பார்த்ததில்லை ...  எப்போதும்  பார்மல் டிரஸ் இலேயே பார்த்திருக்கிறாள்  ஆனால் இன்று முதல் முறையாக சாதாரணமான டிரஸ்ஸில் பார்க்கிறாள்  அதுவும் ட்ராக்ஸ் அண்ட்  டீசர்ட்டில் பார்க்கிறாள்....
மீண்டும் மீண்டும் தன்னை அவனிடம் தொலைத்து  விடுகிறது தன் மனம்...

ஒவ்வொருமுறையும்  அவனிடத்தில் நான் தொலைந்து விடுகிறேன்....
ஒவ்வொருமுறையும்  தொலைந்த என்னை தேடி தேடி அவனிடத்தில்  தோற்று விடுகிறேன்..... 

தயா விட மனம் விட்டு பேசியதாலும் ஆதவ்  சாதாரணமாக பார்த்ததால்  அவள் மனதில் ஒருவித சந்தோஷம் பரவியது அதன்   பிரதிபலிப்பாய் அவள் முகம் பிரகாசித்தது....

என்ன மது  இன்னைக்கு  ரொம்ப சந்தோசமா இருக்க போல....

ஆமா சார் இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்......

என்ன மது இன்னைக்கு  அப்படி என்ன ஸ்பெஷல்....

என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க இன்னைக்கு  ரொம்ப நாள் கழிச்சு நான் தயா வா பார்த்து இருக்கேன் நான் இன்னிக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கேனு  உங்களுக்கு தெரியாது சார்.....
தயா என்ற பெயரை சொன்னதும் அவன்  முகம் மாறியதை மது நன்றாக கவனித்தால் வேண்டும் என்றுதான் தயாவை  பற்றி பேசினால்..
நான் உன்கிட்ட ஒன்னு கெக்கட்ட மது.. .  

உம்..  கேளுங்க சார்...
என்று அவள் வேலையை பார்த்துக் கொண்டே கேட்டாள்..

மது என்ன பாத்து பதில் சொல்லு.....

என்ன ஆச்சு சார் உங்களுக்கு ஏன்  இன்னைக்கு வித்தியாசமா நடந்துக்கிறிங்க....

அவன் மௌனமாகவே இருந்தான்....

எதோ கேக்கனும்னு சொன்னீங்களே இப்போ  கேளுங்க பதில் சொல்றேன்...

உன் பார்வை ஒன்றே போதும் அன்பே... Where stories live. Discover now