21

2K 124 176
                                    

Sema gaanda irupeenganu nenaikuren sry for the late update.ennoda wifi crash aayruchu phonela eludhalaamnaa adhuvum appapo hang aagi 4 dhadava delete aagi enna sodhichuruchu.mannichu

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஜான்விக்கும் கௌதமிற்கும் இடையிலான நெருக்கம் ஒரு நாளில் ஒரு முறையேனும் பேசாவிட்டால் அந்த நாளே முடியாது எனும் அளவிற்கு வளர்ந்தது .

ஒரு மாதம் கடந்திருக்க சனிக்கிழமை விடுமுறை ஆதலால் வழக்கம்போல் ஆதி ஓர் சுற்றுவதற்காக கிளம்பி இருக்க அவளோ சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது தந்தையோ அமர்ந்து இருந்தவர் அவளது அன்னைக்கு ஜாடை காட்டினார் பேச சொல்லி .

அவரோ கண்மூடி திரந்தவர் ஜான்வியிடம் திரும்பி "ஜான்வி"என்றழைக்க

அவளோ அவர்புரம் திரும்பியவள் "என்னம்மா? "என்றாள்.

அவளை நெருங்கி தனது அலைபேசியை அவளிடம் காட்ட அவளோ குழப்பமாய் வாங்கியவள் அதில் இருந்த ஒரு ஆணின் புகைப்படம் கண்டு ஏதோ புரிவதாய் அவளது அன்னையை கேள்வியாய் நோக்கினாள்.

அவரோ புன்னகைத்தபடி"பையன் பேரு வருண் .வயசு 25 .டாக்டரா வேலை பார்க்கிறான் கோயம்புத்தூரில். நல்ல குடும்பம் ஒரு கோயில்ல உன்னை பார்த்துட்டு பிடிச்சுருச்சுன்னு வந்து பேசினாங்க. உனக்கு ஓகேவா ?"என்று கேட்க

அவளிற்கோ மனதில் என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்பட்டது. தயக்கத்தோடு தன் அன்னையை நோக்கியவள்"இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் அம்மா? "என்று கேட்க

அவரோ அவளின் தலையை வருடியவர்"அதில்லடா நீயும் படிச்சு முடிச்ச வேலைக்கு போய்க்கிட்டு இருக்க .நாங்க நல்லா இருக்கேலயே உனக்கு ஒரு கல்யாணத்த பாக்கணும் அப்படின்னு தான்டா அப்பா இன்னும் 3 வருஷத்துல retire வேற ஆயிருவாரு" என்று கூற

அவளோ தனது கையில் இருந்த அந்த ஆணின் புகைப்படத்தை பார்க்கவும் விரும்பாதவள் போல அவரின் கையில் கொடுத்தாள்" இன்னும் ஒரு ரெண்டு வருஷம் மட்டும் போகட்டும் அம்மா. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்." என்க

தோழனா என் காதலனாحيث تعيش القصص. اكتشف الآن