அவளும்-நானும்-19

1.2K 57 15
                                    

சௌமீ முகத்தை கூட பார்க்க பிடிக்காமல், அங்கிருந்து வெளியேறி இருந்தான், கார்த்திக்.இவனை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டுமே என்று சௌமீ அவனை தேடி ஓட, நேரம் பத்து மணியை தாண்டி யிருக்க, சிறிய அளவில் மக்கள் கூட்டமே இருந்தனர்,அவர்களும் நெருங்கிய உறவினர்கள் போலும்,மணமக்களோடு புகைப்படங்கள் எடுத்துக்‌ கொண்டிருகந்தனர்.

எங்கு தேடியும் கார்த்திக் தென்படவில்லை, அப்பொழுது "சௌமீ"என்று குரல் கேட்டு திரும்ப, அங்கே தருண் நின்றிருந்தான்.

சௌமீ கையில் பலதரப்பட்ட உணவு அடங்கிய தட்டை கொடுக்க, "வேண்டாம் தரு "என்று அவள் மறுக்க‌,"சௌமீ, உன் அளுதான்,நீ எங்கிருந்தாலும் உன்னை தேடி உனக்கு கொடுக்க சொன்னான்,நீ சாப்பாடு வேண்டாம்னு சொன்னா,அவனே வந்து ஊட்டினாலும் ஆச்சிரியமில்லை"என்று கலாய்க்க.

அவன் சொன்ன விதத்தில்,சௌமீக்கு சிரிப்பு வர, அவனிடம் தட்டை வாங்கியவள்"அவன் வந்தா தான் நான் சாப்பிடுவேன்னு சொல்லு, அது எவ்வளவு நேரம் ஆனாலும் சரி"என்று உறுதியாக பேச.

"மச்சி, கார்த்திக் உன் மேல் சரியான கோபத்தில் இருக்கான்,நீ மயக்கம் போட்டு வீழ்ந்ததை பார்த்து ,
ஃபங்ஷன் நடக்கும் பொழுது பதற்றத்தை வெளியே காட்டாமல், அங்கிருந்த எல்லோருக்கும் சமாதானம் சொல்லி நிச்சயதார்த்தை தொடர்ந்து நடத்த தைரியம் சொல்லிட்டு உன்னை தூக்கிட்டு ஆஸ்பிட்டல் போகலாம் தான் திட்டம், ஆனால் அதற்குள் இங்கே ஹோட்டல் நிர்வாகம் நாங்களே டாக்டரை கூப்பிடறோம்ன்னு சொல்லிட்டாங்க, ஆனால் டாக்டர் வருவதற்குள் கார்த்திக் முகத்தை பார்க்க முடியல சௌமீ,எல்லா விஷயத்தையும் பதற்றமே இல்லாமல் செய்யறவன், உனக்கு ஏதும் பிரச்சினை இல்லை என்று டாக்டர் சொல்லும்வரை..... பாவம் சௌமீ அவன்"என்று தருண் நடந்தததை உணர்ந்து சொல்ல.

கேட்ட சௌமீக்கோ , கார்த்திக்கை தன்னோடு சேர்த்துக் கொள்ள மனம் பரபரக்க."நான் பார்த்துக்கிறேன் தரு ,நீ கார்த்திக்கை வரசொல்லு "என்று நிலையிலே நிற்க,தருணோ தயங்கியப்படி கிளம்பினான்.

அவளும் நானும்(Completed)Where stories live. Discover now