அவளும் நானும்-7

1.2K 60 5
                                    

குளிர்கால காலை,
வழக்கம் போல சௌமீ பொறுமையாக, எழுந்து வந்தவள்,நேராக தோட்டத்திற்கு சென்று தண்ணீர் விடலாம் என்று சென்று பார்க்க,அங்கே முன்பே தண்ணீர் விடப்பட்ட இருக்க.திரும்பியவள் முன் கார்த்திக் நின்றிருந்தான்

அவனை பார்த்து சௌமீ புருவம் நெரிக்க, ஒரு வாரம் U.S. கிரு்ஸ்துமஸ் விடுமுறை அதனால் எங்களுக்கும் இங்கே லீவ் என்று குதுகலமாக கூற, அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் நகர்ந்து விட்டாள்.

இரண்டு மாதமாக கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவளுக்கு தன்னை புரியவைக்க முயல, அவளோ இதில் துளியும் சம்பந்தமில்லாதவள் போல நடப்பது வாடிக்கையாகி விட்டது.

இந்த ஒரு வார விடுமுறையில், ஒரு முடிவு வரை வேண்டும் என்பது அவன் எண்ணம். அன்றும் அப்படித்தான் அவள் பின்னாலே நிழல் போலவே தொடர், அவளும் கோபத்தோடு முகத்தை ‌சுளிப்பதும், சலித்துக் கொள்வது என்று எதை செய்தும் பயனில்லாமல் போக,அவனிடம் கேட்டே விட்டாள்

"இப்போ என்ன தான் வேணும் உனக்கு" என்று பொங்க

அவளிடம் பெரிய பூன்னகையோடு
"சௌமீ, ப்ளிஸ் என் மேல் உனக்கு கோபம் இருக்குன்னு தெரியும், அது பரவாயில்லை.....என்னால் புரிஞ்சுக்க முடியாது, ஆனால் நமக்குள் இருக்கிற உறவு நீ பிறந்ததில் இருந்து இருக்கு, அந்த உறவு அப்படியே தொடரணும் தான் ஆசைப்பட்டேன்" என்று அவன் ஆவலாக சொல்லிக் கொண்டிருக்க

சௌமீயோ தன் கைகளை இறுக்க கட்டிக்கொண்டு வேறு திசை நோக்கி திரும்பி நின்று கொண்டாள்.

அப்பொழுதும் மனம் தளராமல் கார்த்திக்" என்னை நிரு்பிக்க எனக்கு ஒரு வாரம் போதும், ஆனால் யாரோ வந்து தான் சாட்சி சொல்லி , அதனால் உனக்கு என் மேல் இருக்கிற விருப்பத்தை தெரிஞ்சிக்க வேண்டாம், எனக்கு, நீ எந்த கட்டாயமில்லாமல், என்னை ஏத்துகனும்,சௌமீ.அது நடக்கும் பொழுது நடக்கட்டும், அதுவரைக்கும் ஒரு சக மனுஷனா என்னை என்னோடு நீ பழகணும் தான் எதிர்பார்க்கிறேன்,சௌமீ என்று கெஞ்சவும்

அவளும் நானும்(Completed)Where stories live. Discover now