அவளும் நானும்-12

1.2K 58 8
                                    

தன் அறைக்கு வந்தது முதல் கார்த்திக்கின் நினைப்போடு அலைந்தாள், அதுவும் யாருமில்லாத‌‌ அந்த நேரத்தில்,அதை விடுத்து யோசிக்க வேறு விஷயங்கள் இல்லை அவளுக்கு.

தான் இவ்வளவு உதவி செய்த‌ பிறகும், அவன் பைக்கில் தன்னை விடுதியில் விடாமல், எதற்காக கார் புக் செய்து அனுப்பி வைத்தான், ஒருவேளை அவனுக்கு உடம்புக்கு முடியாமல் இருப்பதால், வைத்து கொள்ளலாம், என்றால் இல்லை, அவள் விடுதி வந்து சேரும் வரை பின் தொடர்ந்து வந்து பார்த்து விட்டு செல்கிறான், அவள் கண்ணுக்கு அவன் தென்படுவதில்லை யே தவிர, அவளால் அவனை உணர முடிந்தது. இந்த டெலிபதி எல்லாம் இந்த காதலிப்பவர்களுக்கு சரியாக வரும் (இதை இன்னும் உணராமல் சுற்றுபவளை என்ன தான் செல்வது)

அனு வந்த பிறகு இருவரும் சென்று இரவு உணவு முடித்து விட்டு வருவதற்கும்,அனுவின் கணவனை அவளை போனில் அழைப்பதற்கும் சரியாக இருக்க, அவள் பால்கனிக்கு சென்று விட,மற்ற நாட்களாக இருந்தால்,சௌமீ ஏதாவது புத்தகம் வாசித்து விட்டு பிறகு தூங்க‌ போவாள்.

இன்றோ அறை கதவை மீறியும் அனுவின் சிரிப்பு குரல் அறையை நிரப்பியது, இத்தனை
நாட்களில் இதெல்லாம் அவளுக்கு உரைத்ததே இல்லை.

இந்த நிமிடம், அவள் தனிமையே‌ உணர்ந்தாள்.இத்தனை நாட்களில் அவள் பெற்றோரிடம் இருந்து எந்த அழைப்பும் வந்ததில்லை, அண்ணன் சித்தார்த் மட்டுமே அடிக்கடி தெடர்புக் கொண்டு இவளிடம் பேசுவது, அவனிடமும் சௌமீ பெரிதாக ஒட்டுவது இல்லை.

அவள் தனியாக இருப்பது சித்தார்த் க்கு தெரிந்திருந்தது, ஆனால் சௌமீயிடம் கவனமாக இரு என்ற வார்த்தையை தவிர அவன் ஏதும் சொல்வதில்லை.அவனுக்கு தெரியும் தன் தங்கையிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று, அதனால் வாரம் ஒரு முறை அவளுக்கு அழைத்து பேசுவான்,அவ்வுளவே.மதுவும் தினம் இரவு அழைத்து பேசுவாள்,அன்றைய பொழுது எப்படி சென்றது என்று இருவரும் பேசிக் கொள்கிறார்கள், அதுவும் பத்து நிமிடங்கள் நீடிக்காது.

அவளும் நானும்(Completed)Where stories live. Discover now