அவளும் நானும் 17

1K 56 7
                                    

"என்னடி சொல்றே,நாலு நாளுக்குள் இத்தனை கதை சொல்ற,அப்போ கார்த்திக் மேல் எந்த தப்புமே இல்லையா?"என்று அனு கேட்க

"இல்லை", என்று சௌமீ தலையே ஆட்ட.

"அப்போ, கார்த்திக்கிடம் பேசி சரி செய்ய வேண்டியது.....அதை விட்டுட்டு எதற்கு இங்க வந்த நீ?..... ஒருவேளை கார்த்திக் ஏதாவது உன்னை பேசிட்டாரா"என்று யோசனையோடு அவளை பார்க்க.

கண்களில் நீர் தழும்ப "இல்லை" என்றாள்.

"நினைச்சேன், பைத்தியமா உனக்கு, எல்லாவற்றையும் பேசி அவரோட சமாதானம் ஆகாமல், இங்கே எதுக்கு வந்தே" என்று கடுப்பாக கேட்க.

"இல்லை அனு,எல்லா தப்பும் என் மேல் தான் இருக்கு, அதைப்பற்றி அவன் ஒரு வார்த்தை பேசலை தெரியுமா? ஆனால் எனக்கும் மனசாட்சி இருக்கு,அவனை எவ்வளவு தொல்லை செய்திருக்கிறேன், அதற்கு தான் எனக்கு நானே இந்த தண்டனை கொடுத்துக்கிட்டேன், நான் ஹாஸ்டல் போறேன் சொன்னதும் ,கார்த்திக்கும் உன் இஷ்டம்ன்னு சொல்லிட்டார்"என்று சொன்னவளின் முகத்தில் சோக ரேகைகள்.

"என்ன போக வேண்டாம்னு கெஞ்சுவார்ன்னு பார்த்தியா,நீயொல்லாம் திருந்தவே மாட்ட" என்று கோபமாக பேச.

எப்போதும் கார்த்திக்கிற்கு எதிராக பேசுபவள் இன்று அவனுக்கு சார்பாக பேசுவது ஆச்சிரியமாக இருந்தது.

அதை கணித்த அனு" என்ன, இத்தனை நாள் எதிர்ப்பா பேசியவள் இன்று அவருக்கு சார்பாக பேசறேளே என்று யோசிக்கிறயா...... வந்த முதல் நாளே நீ சொன்ன கதையில் இருந்தே கார்த்திக் மேல் எந்த தப்புமே இல்லே...உன்னோட ஈகோ தான் எல்லாத்துக்கும் காரணம் புரிஞ்சுது,அதுவும் உனக்கும் கார்த்திக் மேல் காதல் இருப்பது தெரிந்தது,எப்படியும் நீ உண்மையே ஒத்துக்கொள்ள போவதில்லை, அதனால் தான் கார்த்திக் எதிராக பேசினால்,நீ யோசிப்பாய் என்று தான் அப்படி பேசினேன்.......யோசி சௌமீ,இது உன் வாழ்க்கை.....நீதான் முடிவு எடுக்கணும்"என்று கூறியவள் ,அவள் யோசிக்க இடம் கொடுக்க அங்கிருந்து நகர முற்பட

அவளும் நானும்(Completed)Where stories live. Discover now