அவளும் நானும்-9

1.1K 55 1
                                    

தன் அறைக்கு வந்தபிறகு தான் அவளுக்கு நிம்மதியாக உணர‌ முடிந்தது.
இரவெல்லாம் என்னென்னவோ யோசித்து உறக்கம் தொலைத்தவள்.விடியலில் ஒரு முடிவுக்கு வந்தவளாக தூங்கிப் போனாள்.

கார்த்திக் நிலைமையோ வேறு, ஹாங்ஹேவரில் எழும்பொழுதே தலை வலித்தது.எழுந்து நேரம் பார்க்க அது 1.00 என்று காட்டியது,"சே பாதி நாள் தூங்கியே காலி பண்ணிட்டேன்"என்று சொல்லிக் கொண்டே ,கண்ணாடி முன் நின்று தன்னை சரி செய்து கொண்டவனுக்கு, நேற்றைய இரவு சௌமீ உடனான நினைவுகள் ஊர்வலம் போக, தன்னை அவள் என்ன தப்பாக நினைப்பாளோ என்று தோன்றிய மறுநொடியே நேற்று தன்னை மறந்து நின்ற நொடிகள் நினைவுக்கு வர, இனம் புரியாத மகிழ்ச்சி ஆக்ரமித்தது.

உடனே அவளை காண கால்கள் பரபரக்க, வெளியே வர அங்கே அவன் பார்த்த காட்சி உள்ளம் பதறியது.
சௌமீ முன்னால் ஒரு பை இருக்க, அவள் எங்கோ கிளம்ப தயாராகி அமர்ந்திருப்பது போல தோன்றியது.அவளின் இறுக்கம்
அதை பார்க்கும் பொழுது உள்ளுக்குள் பயம் பரவ, அதை மறைத்துக் கொண்டான்.

"சௌமீ, என்ன இதெல்லாம்..... எங்க போற என்று கேட்கும் பொழுதே அவன் குரலில் நடுக்கம் தெரிந்தது ‌

அவனை சலனமில்லாமல் பார்த்தவள்.பின் "நான் இங்கிருந்து போறேன்"என்று எங்கோ பார்த்தப்படி அறிவிக்க.

கேட்டவன் துடித்து தான் போனான்,"சௌமீ,என்ன பேசற நீ " என்றவன் "நேத்து உனக்கு பிடிச்சதால் தான்....நீ வேண்டாம்ன்னு தடுத்திருந்தால்‌ கண்டிப்பாக உனக்கு பிடிக்காததை செஞ்சி இருக்க மாட்டேன், நீ வேண்டாம்ன்னு சொல்லிருந்தா......"என்று அவளை சமாதானப் படுத்த முயற்சிக்க

"நீ எவ்வளவு சொல்லியும், நான் கன்வின்ஸ் ஆகலை,அதனால தானே என்னை மறந்த நிலையில் இருந்ததை உனக்கு சாதகமாக்கிட்டு......திட்டம் போட்டு என்னை அடைய முயற்சி செய்தீங்க, அதில் அப்படியே நான் மயங்கிட்டா நமக்குள் எல்லாம் சரியாகிடும், அதுதானே உங்க திட்டம், கார்த்திக், எவ்வளவு சீப்பான எண்ணம் கார்த்திக் இன்னும் திருந்தலை.....கடைசி வரைக்கும் நீங்க மாறவே போறதில்லை"என்று கொதிக்க

அவளும் நானும்(Completed)Where stories live. Discover now