ஜொலிஜொலிப்பு கண்ணை பறித்தது. இரவில் சூரியன் வந்துவிட்டதா என்னும் வகையில் அவ்விடமே பிரகாசமாக மின்னியது.வரவேற்பில் பிரபலங்கள் பத்திரிகைகளுக்கு புகைப்படம் கொடுக்க தனியாக பச்சை நிறத்தில் அலங்காரம், வரவேற்பில் வழி நெடுக மஞ்சள் நிறத்தில் மலர் அலங்காரம். செயற்கை மஞ்சள் வெளிச்சத்தினூடே வெள்ளை மற்றும் சிகப்பு நிற மலர்கள் எட்டி பார்த்து சிரித்தது மேடை எங்கிலும்.
அதோடு அந்த வெட்டவெளி ஆங்காங்கு ஊதா நிற பூக்கள் மற்றும் மின்விளக்குகள் அலங்கரித்திருக்க வந்தவர்கள் அலங்கார அழகில் மயங்கி தான் போயினர்.
தமிழ்நாடு, இந்தியா, வெளிநாடு என பல ஊடகங்கள் எந்நேரமும் புகைப்படத்தை எடுத்த வண்ணமிருந்தனர். அஸ்வின் விளையாட்டின் மூலம் பிரபலமாகியிருக்க, அவன் தந்தை, சகோதரன் தொழில் மூலம் உலகிற்கே அறிந்தவர்கள். இனி சொல்லவும் வேண்டுமா கூட்டத்திற்கும் பிரபலங்களுக்கும்?
அரசாங்கம் மூலம் Z வகையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பல நாடுகளில் இருந்து பல அரசியல் பிரமுகர்கள், தொழில்துறை பிரபலங்கள், உள் நாட்டு சினிமா துறை, விளையாட்டு துறை என ஒரே பிரபலங்களின் அணிவகுப்பில் அந்த இடமே திக்குமுக்காடி போனது.
புகைப்படம் எடுத்து பத்திரிக்கை நிபுணர்கள் எல்லாம் சோர்ந்து போனது தான் மிச்சம். அவர்களுக்கே இந்நிலை என்றால் மேடையில் அலங்கார பொம்மை போல் அஸ்வின் அருகே நிற்க வைத்திருக்கும் ஆரோஹி நிலை பாவத்திலும் பரிதாபமாக இருந்தது.
மின்ட் நீல நிற லெஹங்கா கவுன், அதே நிறத்தில் முழுக்கை வேலைப்பாடுகளுடன் கூடிய ரவிக்கை. அதற்கு ஏதுவாக ஆகாய நீல நிறத்தை விட மங்கிய நீல நிற துப்பட்டா அணிந்து அத்தனை அழகாய் இருந்த மனைவியை அடிக்கடி அஸ்வினும் திரும்பி பார்த்துக்கொண்டான்.
அவள் துப்பட்டாவின் அதே நிறத்தை ஒட்டி கோட், பாண்ட் என அவனும் சிறிதும் சளைத்தவன் இல்லை என காட்டிக்கொண்டிருந்தான். ஆனால் இன்று விழா நாயகனை மிஞ்சி விழா நாயகி அனைவரது கவனத்தையும் பறித்துக்கொண்டிருந்தாள்.
YOU ARE READING
அலைபாயுதே (Completed)
Romanceஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான். ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள்...