😍 01 😍

9.8K 212 25
                                    

மித்ரன் ரொம்பவே உற்சாகமாக இருந்தான் அன்று.. இரண்டு வருடங்கள் கழித்து தன் சொந்த நாட்டிற்கு திரும்புபவன் பின் எப்படி இருப்பான்..

பணிநிமித்தமாக.. இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டிலே இருந்து விட்டு இன்று தான் இந்தியாவிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறான்.

தனக்காக தன் குடும்பத்தினர் விமான நிலையத்தில் நாளை காத்திருப்பார்கள்.. அப்பா அம்மா அண்ணா அண்ணி.. எல்லாரையும் பார்த்து இரண்டு வருஷம் ஆகுதா..

இப்பத்தான் ஆதவன் கல்யாணம் நடந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள இரண்டு வருஷம் ஓடிடுச்சு.. என தன் மனதுக்குள் நினைத்தபடி சிரித்துக் கொண்டான் மித்ரன்.

மித்ரனின் அப்பா மூர்த்தி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். அம்மா பார்வதி இல்லத்தரசி.. பெயரளவில் மட்டுமல்ல..

அண்ணன் ஆதவன்.. அண்ணி பவித்ரா இருவரும் அந்த கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர்.

கல்லூரியில் சந்தித்துக் கொண்ட இருவரும் காதலித்து மணம் புரிந்து கொண்டனர்.

பவித்ராவின் பெற்றோர் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மூர்த்தி இவர்களை மனதார ஏற்றுக் கொண்டிருந்தாலும். தன் மகன் இப்படி நடந்து கொள்வான் என எதிர்பாராத பார்வதி முதலில் வருத்தமாக இருந்தார்.

பவித்ரா தன் பேரனை சீக்கிரமாகவே கொடுத்திருந்தால் கூட மனதார ஏற்றுக் கொண்டிருப்பாரோ என்னவோ.. இரண்டு ஆண்டுகள் கடந்தும் பவித்ரா இன்னும் கருவுறாமல் இருப்பதால் அவளை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளாமல் தான் இருக்கிறார் பார்வதி.

பார்வதி வார்த்தைகளால் சில நேரங்களில் பவித்ராவை காயப்படுத்தினாலும் ஆதவன் பவித்ராவை என்றும் விட்டுக் கொடுத்தது இல்லை. அவர்களின் காதல் நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது.

கிச்சனில் பாலை சூடு பண்ணிக் கொண்டிருந்தாள் பவித்ரா.

பார்வதிக்கும் மூர்த்திக்கும் அவர்கள் அறையில் சென்று பாலை கொடுத்தாள் பவித்ரா.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now