24 😘

3.4K 158 45
                                    

மித்ரன் சாதனாவின் வாழ்க்கை அழகாக நகரத் தொடங்கியது..

மித்ரன் சாதனாவின் உலகமாக மாறியிருந்தான். தொலைந்த சாதனா.. அதே குறும்புடன்.. மீண்டு கொண்டிருந்தாள்.. மெல்ல மீட்டெடுத்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

மித்ரன் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகும் கூட.. சாதனா தனியாக இருப்பதாக உணரவே இல்லை.. மித்ரனுடன் இருந்த நிமிடங்களை எண்ணி சந்தோஷமாக இருந்தாள்.

ஆனால் மித்ரனோ.. அவள் தனியாக இருப்பதாக உணரக்கூடாது என எண்ணி.. சில மணி நேரத்திற்கு ஒருமுறை மெசேஜ் பண்றது.. கால் பண்றது என அவளை செல்லமாக தொந்தரவு செய்து கொண்டேயிருப்பான்.

"மித்து.. வேலையை பாரு மித்து.."என சாதனா செல்லமாக சிணுங்குவாள்.

"என் வேலையை தான் செல்லம் பார்க்கிறேன்.."என மித்ரன் பதில் சொல்லிவிட்டு அவளிடம் எதையாவது பேசிக் கொண்டிருப்பான்.. கிடைக்கும் சிறு சிறு இடைவேளையிலும்.

"மித்து.. எழுந்திரு.."என எழுப்பிக் கொண்டிருந்தாள் சாதனா.

"ம்.."என்றான் மித்ரன் கண்களை திறக்காமலே..

"இன்னைக்கு சண்டே.. என்னை வெளியே கூட்டிட்டு போ மித்து.."என சாதனா சொன்னாள்.

"ம்.. போலாம்ம்ம்.."என்ற மித்ரன் சாதனாவை இழுத்து அணைத்துக் கொண்டான்.

"மித்து.. எழுந்திரு மித்து.."என சாதனா சிணுங்க.. மீண்டும்.. "ம்.."என மட்டும் சொன்னவாறு இருந்தான் மித்ரன்.

"மித்து.. எவ்ளோ நேரம் ம்..னு சொல்லிட்டே இருக்க.. எழுந்திரு.."என சாதனா சொல்ல.. ஒருவழியாக கண் திறந்தான் மித்ரன்.

"சொல்லு செல்லம்.. என்ன செய்யணும்.."என கேட்டான் மித்ரன்.

"என்னை வெளியே கூட்டிட்டுப் போ.."என்றாள் சாதனா.

"ம்.. அப்புறம்.."

"அப்புறம்.. அப்புறம்.."என சாதனா யோசிக்க.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

"ஆங்.. மீன் குழம்பு வச்சுக் கொடு.."என சாதனா சொல்ல.. மித்ரன் அவளை முறைத்தான்..

வல்லமை தாராயோ..Where stories live. Discover now