😍 06 😍

3.4K 173 23
                                    

சாதனாவின் சிரிப்பு மித்ரனின் மனமெங்கும் நிறைந்திருந்தது.

அவள் சிரிப்பைக் காண எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தான் மித்ரன். அதற்காகவே சாதனாவை சுற்றி வந்து ஏதாவது குறும்பு செய்து கொண்டிருந்தான் மித்ரன்.

சாதனா வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும்.. மித்ரனின் குறும்புகளை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தாள். அதை மித்ரனும் புரிந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள்.. சாதனா பார்வதிக்கு சமையல் அறையில் உதவி செய்து கொண்டிருந்தாள்.

சாதனா சமையல் அறையில் நிற்பதை கவனித்த மித்ரன்.. அவளை பயமுறுத்த எண்ணி.. "பே..."என கத்தியபடி.. அறைக்குள் குதித்தான்.. பார்வதி நிற்பதை கவனிக்காமல்..

சாதனா திடீரென கேட்ட சத்தத்தில் மிரண்டு திரும்பினாள்.

கையில் இருந்த பாத்திரத்தை கீழே போட்ட பார்வதி.. மித்ரனை முறைத்தபடி.. "டேய்.. எதுக்கு இப்ப குரங்கு மாதிரி குதிச்சிட்டு இருக்க.. பேய் மாதிரி அலற வேற செய்யுற.. ஏன்டா இப்டி உயிரை வாங்குற.."என்றபடி அவன் முதுகில் இரண்டு அடி போட்டார்.

மிரட்சியுடன் பார்த்த சாதனாவுக்கோ.. மித்ரன் பார்வதியிடம் அடிவாங்கியதை கண்டதும் சிரிப்பு எட்டிப்பார்த்தது.

சாதனாவின் சிரிப்பை காண்பதற்காகவே இப்படி எதாவது செய்து கொண்டிருந்தான் மித்ரன்.

பள்ளி தேர்வுகள் முடிந்து.. விடுமுறை தொடங்கி இருந்தது. ஆதவனும் பவித்ராவும் தங்கள் அறையில் இருந்தனர்.

அப்போது அங்கே வந்த சாதனா.. இருவரிடமும் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.

சாதனா அங்கிருந்து சென்றபின்.. பவித்ரா ஆதவனிடம்.. "ஆதி அவளை கவனிச்சீங்களா.. ரொம்ப மாறிட்டால்ல.."என்று சொன்னாள் சந்தோஷமாக..

"அவ மாறலை பவி.. இப்டித்தான் இருந்தா.. ஆனா பாவம் அவ.. எவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சிட்டா.."என்றான் ஆதவன்.

"ஆமா ஆதி.. அவ அதிலிருந்து மீண்டு வந்ததே பெரிய விஷயம்.."என்றாள் பவித்ரா.

வல்லமை தாராயோ..Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ