😍 05 😍

3.7K 169 27
                                    

அன்று சாயந்திரம் பள்ளியில் இருந்து வந்ததும்.. சாதனா பவித்ராவை தேடி சென்றாள்.

பவித்ராவின் அறைக்குள் சாதனா செல்வதை கவனித்த மித்ரன்.. "அச்சோ.. வந்த உடனே அண்ணிகிட்ட போட்டு கொடுக்க வந்துட்டாளோ.."என நினைத்தான்.

அறையின் வாயில் அருகில் நின்றபடி.. சாதனா தன்னைப்பற்றி பேசுகிறாளோ.. என கேட்டுக் கொண்டிருந்தான் மித்ரன்.

"டேய்.. உனக்கே இது அசிங்கமா இல்லையா.. இப்டி அடுத்தவங்க பேசுறத ஒட்டுக்கேட்கிற.."என மித்ரனின் மனம் கேள்வி கேட்டது.

"அடுத்தவங்க இல்லை.. என் சாதனா பேசுறத தான் கேட்கப் போறேன்.. அதுவும் என்னைப்பத்தி என்ன பேசுறானு தெரிஞ்சுக்க தான்.."என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டான் மித்ரன்.

பவித்ராவின் அறைக்குள் வந்த சாதனா.. "பவி அக்கா.. எனக்கு ஒன்னு வேணும்.."என்றாள்.

"என்ன மரியாதை லாம் பலமா இருக்கு.. அப்டி என்ன வேணும்.."என்றாள் பவித்ரா.

"அது.. அது.."என தயங்கினாள் சாதனா.

"என்ன வேணும்.. சொல்லு செல்லம்.. நான் வாங்கித் தர்றேன்.."என தனக்குள்ளே பேசிக் கொண்டான் மித்ரன்.

"உன்கிட்ட கொலுசு இருக்கா.."என கேட்டாள் சாதனா.

"ஆம்.. இதோ போட்ருக்கேன்ல.."என்றாள் பவித்ரா தன் கால்களை காட்டியபடி.

அவளை செல்லமாக முறைத்த சாதனா.. "எனக்கு கொலுசு போடணும் போல இருக்கு..  வேற கொலுசு வச்சிருக்கீயா.."என கேட்டாள்.

ஒரு நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.. பின் லேசான புன்னகையோடு.. "இருக்கு.. ஆனா.."என்றாள்.

"பவி ப்ளீஸ் செல்லம்ல கொடு.. ரொம்ப நாளாச்சு.. நான் கொலுசு போட்டு.. எனக்கு ஆசையா இருக்கு.."என்றாள் சாதனா.

"சரி.. ஏன் திடீர்னு கொலுசு போடணும்னு ஆசை.."என்றாள் பவித்ரா.

"அது.. அது.. தெரியலை.."என்றாள் சாதனா.

"பழசு தான் இருக்கு.."என்ற பவித்ரா பீரோவில் இருந்து கொலுசை எடுத்துக் கொண்டிருக்க.. சாதனா அறை வாயிலில் தெரிந்த மித்ரனின் நிழலை கவனித்தாள்.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now