12 💕

3.1K 168 45
                                    

சாதனாவிடம் சங்கரன்.. "வேலை லாம்.. பிடிச்சிருக்கா டா.."என கேட்டார்.

"ரொம்ப பிடிச்சிருக்கு.. ப்பா.."என்றாள் சாதனா.

"ஆனா இந்த டீம் லீடரை தான் எனக்கு பிடிக்கவேயில்லை.."என்றாள் சாதனா.

"ஏன் டா.."என கேட்டார் சங்கரன்.

"ரொம்ப வழியுறான்.. அவனை பார்த்தாலே எரிச்சலா வருது.."என சாதனா சொன்னாள்.

சங்கரன்.. "அதுக்கு தான் சொன்னேன்.. இந்த வேலை வேண்டாம்னு.. நீதான் கேட்கவேயில்லை.. இப்பவும் ஒன்னுமில்லை.. அந்த வேலையை ரிசைன் பண்ணிடு.. நான் இங்க பக்கத்துல இருக்க ஸ்கூல்ல வேலைக்கு சேர்த்து விடுறேன்.."என்றார் பதற்றமாக.

"அப்பா.. எங்க போனாலும் இப்டி நாலு பேர் இருக்கத்தான் செய்வாங்க.. அதெல்லாம் பார்த்தா வீட்டை விட்டே வெளிய வரமுடியாது.."என்றாள் சாதனா.

"அதெல்லாம் சரிதான் டா.. ஆனா.."என சங்கரன் தொடங்க.. சாதனா.. "அப்பா.. இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த வேலை பார்ப்பேன்.. அப்புறம் உங்க விருப்பம் போல நான் எதாவது ஒரு ஸ்கூலுக்கு வேலைக்கு போறேன்.. போதுமா.."என சொல்லி சமாதானம் செய்தாள்.

சாதனா விலகிச் செல்வதால் கோபத்தில் இருந்தான் தினேஷ்.. சாதனா வேறு டீமிற்கு மாறுவதற்காக.. சம்பந்தப்பட்டவர்களிடம் மெயில் மூலமாகவும் நேரடியாகவும் பேசினாள்..
ஆனால் எந்த பலனும் இல்லை.. மாறாக சாதனாவின் நடவடிக்கையால்.. தினேஷின் கோபம் அதிகரித்திருந்தது.

வழக்கமான நேரத்துக்கு சாதனா வராமல் போகவே.. சங்கரன் சாதனாவுக்கு போன் பண்ணினார்.

"அப்பா கொஞ்சம் வேலை இருக்கு.. நான் முடிஞ்சதும் வந்துடுறேன்.."என்றாள் சாதனா.

ஏனோ சங்கரனுக்கு மனமெல்லாம் பாரமாக இருந்தது.

தினேஷ் வேண்டுமென்றே சாதனாவுக்கு அதிக வேலைகளை கொடுத்தான். தான் அவன் எண்ணத்திற்கு அடிபணியவில்லை என்பதால் வேலை கொடுத்து பழிவாங்குவதாக சாதனா நினைத்தாள்.

சாதனா வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு கிளம்ப வேண்டும் என்பதிலே கவனமாக இருந்தாள்.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now