13 💕

3K 161 33
                                    

தன்னை சிதைத்தவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும் என உறுதியாக இருந்த சாதனா.. தன் கண்களில் இருந்து ஒரு துளி நீரைக் கூட வழியவிடாமல் பார்த்துக் கொண்டாள்.

தன் செயலில் உறுதியாக இருந்து அவனுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்துவிட்ட நிம்மதியோடு வீட்டுக்கு வந்த சாதனாவுக்கு.. சங்கரனின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது.

அதுவரை தேக்கி வைத்திருந்த கண்ணீரை.. மொத்தமாக அழுது தீர்த்தாள் சாதனா.. சங்கரனின் உயிரற்ற உடல் முன்.

தானும் அதே முடிவை எடுக்க துணிந்து.. விஷத்தை அருந்த சாதனா எடுத்த வேளை.. அனு அங்கே வந்து சேர்ந்தாள்.

அவளை தடுத்து நிறுத்திய அனுவை அணைத்துக் கதறி அழுதாள் சாதனா.

"அனு.. அப்பா.. அப்பா.. எனக்கு இனி யாரு இருக்கா.. நானும் செத்துப்போயிடுறேன் அனு.. என்னை விடு.."என அழுத சாதனாவை விஷத்தை அருந்தாமல் தடுக்க முடிந்ததே தவிர.. அவளை சமாதானம் செய்ய முடியவில்லை.

ஆதவன் சங்கரனின் இறுதிச்சடங்கை செய்து முடித்தான். சாதனா மறுத்தும்.. அவளை தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர்.

அனுவின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதால்.. அங்கே இருந்தால் சாதனா இயல்பாக மாறுவாள் என எண்ணி அனுவுடன் சாதனாவை அனுப்பி வைத்தனர்.

சாதனாவின் அப்பா தவறியதை மட்டும் தன் வீட்டினரிடம் சொல்லி சில நாட்கள் அவள் தன்னுடன் இருக்க அனுமதி வாங்கினாள் அனு.

சாதனாவும் அனுவுக்காக இயல்பாக இருப்பது போல நடந்து கொண்டாள். உள்ளுக்குள் தன் வலி அனைத்தையும் மறைத்துக் கொண்டிருந்தாள்.

சாதனா இயல்பாக இருப்பதாக காட்டிக் கொள்கிறாள்.. என்பது அனுவுக்கு புரிந்தாலும்.. காலம் அவளை மாற்றும் என நம்பினாள்.

அனு சரண் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

ஆதவனும் பவித்ராவும் அனுவுடன் இருக்க.. தலைவலிப்பதாக சொன்ன சாதனா.. ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தாள்.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now