😍 09 😍

3.3K 172 30
                                    

மித்ரன் தன் பிரிவு சாதனாவை வதைக்கும்.. அந்த வலி நிச்சயமாக அவள் கண்களில் தெரியும் என எண்ணினான்.

ஆனால் சாதனா தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல.. தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த மித்ரன்.. "சரியான அழுத்தக்காரி.."என மனதில் நினைத்தான்.

பார்வதி.. "அப்ப நாங்க உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கவா.."என கேட்டார்.

அதற்கும் சாதனா இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ள.. மித்ரனுக்கு கோபமாக இருந்தது.

"ஆமா.. பொண்ணு பாருங்க.. பையன் என்ன பண்றானு கேட்டா.. வேலை வெட்டி இல்லாம இருக்கான்னு சொல்லுங்க.."என எரிச்சலுடன் சொன்னான் மித்ரன்.

"வேலைல சேரத்தானே பெங்களூர் போற.. நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கோனா சொல்றேன்.. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா.."என பார்வதியும் பேசினார்.

"ஆமா.. அது ஒன்னு தான் இப்ப குறைச்சல்.."என சலிப்பாக சொன்ன மித்ரன்.. சாதனாவை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

மித்ரன் சென்றதும் தன் கண்களில் கசிந்த நீரை யாரும் பார்க்கும் முன் துடைத்துக் கொண்டாள் சாதனா.

எதிர்பாராத விதமாக சாதனாவை பெண்கேட்டு அந்த ஊரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வந்தார்கள்.

பார்வதியும் மூர்த்தியும் அந்தக் குடும்பத்தினர் பற்றி நன்கு அறிந்திருந்ததால் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆதவனும் பவித்ராவும் இதில் சாதனாவின் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் தான் இருந்தனர்.

மித்ரனுக்கு சாதனா நிச்சயமாக சம்மதம் சொல்லமாட்டாள் என தோன்றியது.

சாதனாவை அழைத்து அவளிடம்.. வந்திருந்தவர்களை பற்றி கூறி.. சாதனாவின் முடிவை கேட்டனர் பார்வதியும் மூர்த்தியும்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்த சாதனா.. நேரடியாக அவர்களிடம்.. "மன்னிச்சிடுங்க.. எனக்கு விருப்பமில்லை.."என தன் முடிவை தெரிவித்தாள்.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now