17 💕

3.1K 143 33
                                    

💕 "பார்த்ததும்.. அப்டியே கட்டிப்பிடிச்சு.. உம்மா கொடுக்கலாம்னு தோணுச்சா.. செல்லம்.."என சிரிப்புடன் அடுத்த பக்கத்தை புரட்டினான் மித்ரன்.

❤❤

மித்ரன் தூங்குற மாதிரி நடிக்கிறத பார்த்ததும் முதல்ல சிரிப்பா வந்துச்சு..

அப்புறம்..

அப்புறம்..

"என்கிட்டயே நடிக்கிறீயா.. இந்த சாதனா கிட்ட உன் வேலை லாம் நடக்காது..னு.."அவன் காதை பிடிச்சு திருகணும் போல இருந்துச்சு..

❤❤

💕 "அடிப்பாவி.. நீ இப்டிலாம் யோசிப்பனு நான் நினைச்சு கூட பார்க்கலை.."என தன் காதை தடவிக் கொண்டான் மித்ரன்.

❤❤

அப்டி பண்ணா எப்டி இருக்கும்னு நினைச்சு பார்த்துட்டு இருந்தேன்.. சிரிப்பா வந்துச்சு.. மித்ரன் அதை கவனிச்சிடக் கூடாது..னு அவருக்கு பின்னால போய் நின்னுகிட்டேன்..

கொஞ்ச நேரமா.. அப்டியே தூங்குற மாதிரி இருந்துட்டு..மெதுவா ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாரு..

நான் கிளம்பிட்டேனு நினைச்சாரோ.. என்னமோ தெரியலை.. வேகமாக எழுந்து சுத்தி சுத்தி என்னை தேடுனாரு..

சிரிப்பை கண்ட்ரோல் பண்ணிட்டு.. "கிளம்பலாமா.."னு கேட்டேன்..

அன்னைக்கு மித்ரனோட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா இருந்துச்சு..

மித்ரன் பேசிட்டே இருந்தாரு.. நான் எதுவுமே பேசாம இருந்த போதும் நிறுத்தாம பேசிட்டே இருந்தாரு.

எல்லாரும் சொன்ன மித்ரன்.. இப்டித்தான் இருப்பாருனு தெரிஞ்சுக்கிட்டேன்..

அதுமட்டுமில்ல.. மித்ரனோட இருக்கும் போது மட்டும் தான்.. என் மனசில ரொம்ப நாளைக்கு பிறகு சந்தோஷம் இருந்துச்சு..

என்னை அறியாமலே.. அந்த சந்தோஷம் வாழ்க்கை முழுக்க இருக்கணும்னா மித்ரன்.. மித்ரன்.. என் லைப்ல இருக்கணும்னு தோணுச்சு..

நான் நினைக்கிறது சரியா தப்பா.. தெரியலை..

❤❤

வல்லமை தாராயோ..Where stories live. Discover now