😍 08 😍

3.1K 163 26
                                    

ப்ரேக்கிங் நியூஸ் என்ற எழுத்துக்கள் ஒளிர.. பிண்ணனியில் இசை ஒலித்தது..
சில நொடிகள் கடந்ததும்.. "எம்.பி மகன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் தந்தை மரணம்.. தற்கொலையாக இருக்கலாம் என போலிஸ் சந்தேகம்.."என செய்தி வாசித்தாள் ஒரு பெண்.

அப்போது வீட்டிற்குள் வந்த ஆதவன்.. வேகமாக டீவியை ஆப் பண்ணிவிட்டு.. மித்ரனை திட்டினான்.

பவித்ராவும் அங்கே இருப்பதை கவனித்த ஆதவன்.. "நீயும் இங்க தான் இருக்கீயா.. உனக்குமா அறிவில்லை.."என்றான் கோபமாக.

"ஆதி.. அது.."என அவள் தடுமாறிக் கொண்டிருக்க.. அவளை முறைத்த ஆதவன் தன் பார்வையை சாதனாவின் புறம் திருப்பினான்.

சாதனா உடல் நடுங்க.. அங்கே நின்று கொண்டிருப்பதை அப்போதுதான் மித்ரனும் கவனித்தான்.

"என்னாச்சு.. சாதனாவுக்கு.."என உள்ளுக்குள் பதறிய மித்ரன் அவளருகில் நகர.. சாதனா அங்கிருந்து வேகமாக தான் இருக்கும் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

பவித்ரா.. "சாதனா.. சாதனா.."என பதற்றத்துடன் அழைத்தாள்.

"அவளை கொஞ்ச நேரம் தனியா இருக்கவிடு.."என ஆதவன் கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

மித்ரனுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.. டீவியில் வாசித்த ஏதோ ஒரு நியூஸ்க்கு ஏன் ஆதவன் இவ்ளோ கோபப்படுறான்.. சாதனா ஏன் பயந்த மாதிரி இருந்தா.. என்னாச்சு.. எதுவும் புரியாமல் பவித்ராவை பார்த்தான் மித்ரன்.

சாதனாவின் கடந்த கால வாழ்விற்கும் அந்த செய்திக்கும் இருக்கும் சம்பந்தம் பற்றி அறிந்தால்.. மித்ரன் என்ன முடிவெடுப்பானோ..

பவித்ரா கலங்கிய கண்களோடு.. கோபத்துடன் சென்ற ஆதவனை எப்படி சமாதானம் செய்வதென அறியாமல் தங்கள் அறைக்கு சென்றாள்.

பவித்ரா.. "ஆதி.."என அழைக்க.. கோபமாக இருந்த ஆதவன்.. எதுவும் பேசாமல் இருந்தான்.

"சாரி.. ஆதி.. நான்.."என பவித்ரா சொல்லத் தொடங்கினாள்.

"உனக்குனு ஒவ்வொரு விஷயத்தையும் அவ எப்டி பார்த்து பார்த்து பண்றா.. இந்த சின்ன விஷயத்தை கூட உனக்கு சொல்லித் தரணுமா.."என கோபமாக கேட்டான் ஆதவன்.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now