😍 03 😍

4.3K 173 22
                                    

இரண்டு நாட்களாக.. பவித்ராவை எந்த வேலையும் செய்யவிடாமல்.. பார்த்துக் கொண்டாள் சாதனா.

பார்வதியும் தன் வேலை பாதியாக குறைந்ததால் எதுவும் கண்டு கொள்ளவில்லை..

ஆதவன் பவித்ரா இருவரிடமும் தான் சாதனா இயல்பாக பேசினாள். பார்வதி மூர்த்தியிடம் தேவைக்கு ஏற்ப மட்டுமே பேசினாள்.

சாதனா இதுநாள் வரையிலும் அப்படித்தான் இருந்தாள்.. என்பதால் அது அவர்களுக்கு வித்தியாசமாக தோன்றவில்லை.

மித்ரனிடம் பெரும்பாலும் சாதனா பேசுவதில்லை.. ஆனாலும் மித்ரனுக்கு தன் வீட்டில் ஒருத்தியென சுற்றி வந்த சாதனா மீது இனம்புரியா அன்பு துளிர்த்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை.. பள்ளி விடுமுறை என்பதால்.. ஆதவனும் பவித்ராவும் வீட்டில் இருந்தனர்.

பார்வதி மித்ரனுக்கு பிடிக்கும் என்பதால் தேங்காய் சட்னி செய்திருந்தார். அப்போது அங்கே வந்த சாதனா.. "அத்தை.. நான் தோசை சுடுறேன்.. நீங்க எல்லாரையும் சாப்பிட கூப்பிடுங்க.."என்றாள்.

அவரும் சரியென தலையசைத்துவிட்டு சென்றார்.

சாதனா எல்லோருக்கும் தோசை சுட்டு பரிமாறினாள். பார்வதியும் மூர்த்தியும் முதலில் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து கொண்டனர்.

ஆதவன் பவித்ரா மித்ரன் மூவரும் மட்டும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

பவித்ரா இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டு எழுந்து கொள்ள.. அங்கே வந்த சாதனா.. அவளை எழும்ப விடாமல் அடுத்த தோசையை வைத்தாள்.

"போதும் சாதனா.."என பாவமாக முகத்தை வைத்தபடி சொன்னாள் பவித்ரா.

"உதைபடுவ பவி.. ஒழுங்கா சாப்பிடு.."என அவளை முறைத்தபடி சொன்ன சாதனா.. அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதவனை முறைத்தாள்.

சாதனா முறைப்பதற்கான காரணம் புரியாமல் ஆதவன் என்ன என கேட்டான்.

"மாமு.. உனக்கு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா.."என கேட்டாள் சாதனா.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now