25 😘

6.3K 263 132
                                    

சாதனா உற்சாகமாக மித்ரனுக்கு சட்டையை தேர்வு செய்ய தொடங்கினாள்.

அப்போது மித்ரனுக்கு போன் வந்தது.. "அரவிந்த் தான்.."என சாதனாவிடம் சொல்லிய மித்ரன்.. போனை அட்டெண் செய்து.. "சொல்லுடா.."என்றான்.

"எங்கடா இருக்க.."என கேட்டான் அரவிந்த்.

"ஷாப்பிங் வந்தோம்.. என்ன விஷயம் டா.."என கேட்டான் மித்ரன்.

"சாதனா பக்கத்தில இருந்தா கொஞ்சம் தள்ளி  வந்து பேசுடா.."என அரவிந்த் சொல்ல.. சாதனாவிடம் இருந்து சற்று தள்ளி வந்தான் மித்ரன்.

ஆனாலும் சாதனாவின் பார்வையில் படும் தூரத்தில் நின்று பேசத் தொடங்கினான் மித்ரன்.

"என்ன விஷயம் டா.."என கேட்டான் மித்ரன்.

"அந்த தினேஷ் பரோல்ல வந்திருக்கான் டா.."என்றான் அரவிந்த்.

"ஓ.."என யோசித்த மித்ரன்.. "விடுடா பார்த்துக்கலாம்.."என்றான்.

"சரிடா.. சாதனாவை கவனமா பார்த்துக்கோ.."என்றான் அரவிந்த்.

"ம்.."என்ற மித்ரன் போனை கட் செய்து விட்டு யோசனையோடு சாதனாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

சாதனா மித்ரனுக்கு சட்டையை தேர்வு செய்து விட்டு.. "மித்து.."என அழைத்தவாறு மித்ரனை பார்த்தாள்.

அப்போது அங்கே நின்று கொண்டிருந்தவனின் பார்வையை கவனித்தவளின் உடல் கூசியது.

சாதனாவின் மாற்றத்தை கவனித்த மித்ரன்.. அவள் பார்வை செல்லும் திசையை கவனித்தவாறு அருகில் வந்தான்.

"என்ன மேடம்.. எப்டி இருக்கீங்க.. சார் யாரு.."என நக்கலான தொணியில் கேட்டவாறு சாதனாவின் அருகில் வந்தான் அவன்.

அவனை முறைத்த மித்ரன்.. அவன் யார் என்பதை போல சாதனாவை பார்த்தான்.

சாதனா தடுமாற்றத்துடன்.. "அ.. அனு கல்யாணத்துல.."என சொல்லத் தொடங்க மித்ரன் புரிந்து கொண்டான்.

"ஓ.. சார் தானா அது.."என்றவன் அவனை பார்த்து.. "சார் என்ன பண்றீங்க.. இப்பவும் கல்யாண வீட்டில பொண்ணுங்க கிட்ட செருப்படி வாங்கிட்டு தான் இருக்கீங்களா.."என சிரித்தபடியே கேட்டான் மித்ரன்.

வல்லமை தாராயோ..Where stories live. Discover now