பதிப்புரிமை சட்டம்(copy right act)1957

41 0 0
                                    

Copy right act 1957( பதிப்புரிமை சட்டம்)
பழைய காலங்களில் கலைஞர்களும், இசைவாணர்களும்,  ஆசிரியர்களும் தங்களது படைப்புகளை புகழுக்காகவும் மற்றவர்கள் தங்களை ஏற்றுக் கொள்வதற்காக உருவாக்கினர், படைப்புகளை  தங்களது வாழ்க்கைத் தொழில் பிழைப்பிற்காக படைக்கவில்லை, அப்பொழுது பதிப்புரிமை என்ற வினா எழவில்லை, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே பதிப்புரிமையின் முக்கியத்துவம் உணரப்பட்டது நூல்களில் மறு தயாரிப்புகளுக்கு பெருமளவில் இது வழிவகை செய்தது.

     இந்திய பதிப்புரிமை குறித்து முதலாவது செய் சட்டம்(statutory law) 1847 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில்  இயற்றப்பட்டது.

பதிப்புரிமை  அறிவுசார் சொத்துரிமையின் ஒரு வகையாகும்,  பதிப்புரிமை ஆனது மனித திறமை மற்றும் உழைப்பு அல்லது மனித மூளையின் விளைபொருள்,  ஆதலால் சட்டத்தினால் நுண் பொருளியல் ஆக  (in corporal movable property) அசைவில் சொத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

   ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் படி பதிப்புரிமை என்பது இலக்கிய, இசை அல்லது கலைத்திறன் படைப்பு பொருட்களை, மீண்டும் தயாரிக்க, வெளியிட மற்றும் விற்க ஒரு தனிப்பட்ட உரிமையாகும் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் பதிப்புரிமை என்பது ஆசிரியர் அல்லது இசையமைப்பாளர் போன்றவர்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தங்களது மூலப் படைப்பு நகல்களை அச்சிட,  வெளியிட மற்றும் விற்க சட்டத்தினால் கிடைக்கும் ஒரு தனிப்பட்ட உரிமை எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

     பதிப்புரிமையின் உடைமையாளர் நகல் எடுத்தல்,  பொதுமக்களுக்கு வழங்குதல்,  நிகழ்ச்சி நடத்துதல் நாடகம் ஆக்குதல்,  பொதுமக்களுக்கு காட்டுதல் மற்றும் படைப்பினை ஒளிபரப்புகள் ஆகியவற்றை செய்ய என அவருக்கு பல்நோக்கு உரிமைகள் உண்டு.

     பதிப்புரிமையின் சிறப்பம்சம் யாதெனில் ஆசிரியர் தான் பொருள் குறித்து குறிப்பிட்ட சில செயல்களைச் செய்யவும் அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அதிகாரமளித்தல் ஆகும்.  அதாவது அவரது படைப்பினை உரிமை மாற்றம், மறு பதிப்பு, மறு வெளியீடு, திருத்தம் செய்தல் முதலிய செயல்களுக்கும் மற்றவருக்கு அதிகாரமளித்தல் இதில் அடங்கும்,

சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்Where stories live. Discover now