தொழிலாளர் இழப்பீடு சட்டம் (the workmens comensation act )

4 0 0
                                    

    பிரிவு 1(section 1): இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடியது ஆகும்,  குறிப்பிட்ட சில வகை தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது தகுதி இழப்பிற்கு இழப்பீடு பெறுவதற்கு இச்சட்டம் வகை செய்கிறது.

  பிரிவு 2:

     சட்டம் பொருந்தக்கூடிய தொழில்களும் தொழிலாளர்களும்:

    இச்சட்டம் பொருந்தக்கூடிய தொழில்களையும் தொழிலாளர்களின் பிரிவு 2(dd)  வரையறுக்கிறது.

    பிரிவு 2(dd)ன் படி  தொழிலாளி என்றால்

1. ரயில்வே நிர்வாக அலுவலகங்களில் நிரந்தரமாக பணியமர்த்தப்படாத ரயில்வே தொழிலாளி,

2. a. கப்பல் மாலுமி அல்லது பிற கப்பல் பணியாளர்கள்;
   
    b. விமான தலைவன் அல்லது விமானி அல்லது பிற விமான பணியாளர்கள்;

    c.  ஓட்டுநர் உதவியாளர் மெக்கானிக் கிளீனர் அல்லது மோட்டார் வாகனம் தொடர்புடைய பிற வேலைகளை செய்பவர்கள்;

   d.  நிறுவனத்தால் வெளிநாட்டில் வேலை செய்வதற்காக வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள்;  அத்துடன் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் விமானம் அல்லது மோட்டார் வாகனத்தில்  வெளியே பணி அமர்த்தப்பட்டவர்கள்; மேலும் காயமடைந்த ஒரு தொழிலாளி இறந்துவிட்டால் தொழிலாளியை சார்ந்து இருப்பவரையும் தொழிலாளி என்ற பதம் குறிக்கும் என்று பிரிவு 2(i) (dd) இன் உட்கூறு (iii) கூறுகின்றது.

   இவை தவிர (ii)வது அட்டவணையில் 70க்கு மேற்பட்ட வகையான தொழில்களில் மற்றும் அவற்றின் உப தொழில்களிலும்  வேலை பார்ப்பவர்கள் அனைவரும் தொழிலாளர்களே என பட்டியலிடப்பட்டுள்ளது அவற்றில் சில:

தொழிற்சாலை சட்டங்கள்  வரையறுக்கும் உற்பத்தி நடைமுறை நடைபெறும் தொழிற்சாலை வளாகத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள்,  உற்பத்தி நடைமுறை தொடர்புடைய பிற வேலைகளை  அத் தொழிற்சாலை வளாகம் அல்லது வெளியில் வேலை செய்பவர்கள்;

  2. முதலாளியின் வணிகம் அல்லது வியாபாரம் தொடர்பான வெடி பொருட்களை உற்பத்தி செய்யும் அல்லது கையாளும் வேலைக்கு  அமர்த்தப்பட்டவர்கள்;

3. சுரங்க வேலைகளில் அமர்த்தப்பட்டவர்கள்;

4.  கட்டிடங்கள், அணைக்கட்டுகள், பாலங்கள், கால்வாய்கள், சாலை அமைத்தல்,  பராமரித்தல், பழுதுபார்த்தல் அல்லது இடித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள்;

5.   இணைப்பு படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்;

  6. சர்க்கஸில் பணியமர்த்தப்பட்டவர்கள்;

  7.  தரைமட்டத்திலிருந்து 3.66  உயரம் அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் உள்ள விளம்பரப் பலகையில் படம் வரையும் ஓவியராக பணியமர்த்தப்பட்டவர்;

  8.  கோவில் விமானங்களில் வேலை பார்ப்பதற்காக சிற்பிகளாக பணியமர்த்தப்பட்டவர்கள்;

  9.  உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள் கழிவு அகற்றும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்;

10.  உயரமான மரங்களில் ஏறுவதற்கு  பணி அமர்த்தப்பட்டவர்கள்;

   11.  கரும்பு பிழியும் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்;

  12.  வெடி வைத்து வெடிக்கும் வேலை தொடர்பான பணியில் ஈடுபடுபவர்கள்;

  13.  அதில் பயிரிடுதல் அல்லது கால்நடைகளை வளர்த்தல் மற்றும் பராமரித்தல் அல்லது காடு வளர்ப்பு நடவடிக்கைகள் அல்லது மீன்பிடித்தலில் பணியமர்த்தப்பட்டவர்கள்;

  14.  திறந்த கிணறு அல்லது வெட்டு கிணறு,  ஆழ்துளை  - வெட்டு கிணறு, கிணறு நீர் வடிகட்டும் தளம் மற்றும் இது தொடர்பான வேலைகளை செய்தல்,  துளையிடுதல் அல்லது ஆழப்படுத்துதலில் ஈடுபடுபவர்கள்; 

   இவற்றில் 7 முதல் 11 வரை உள்ள தொழில்களில் பணிபுரிபவர்கள் தமிழ்நாடு மாநில அரசால் II  அட்டவணையில் சேர்க்கப்பட்டவர்கள்.

தொழிலாளர் இழப்பீடு  சட்டத்தின் கீழ் ஒருவர் இழப்பீடு பெற வேண்டுமெனில் அத்தொழிலாளி  IIவது  அட்டவணையில் வரிசைப்படுத்தப்பட்ட தொழில் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றினுள் வருபவராக கட்டாயம் இருக்க வேண்டும்,   இரண்டாவது அட்டவணையில் இல்லாத தொழில்களில் பணியமர்த்தப்பட்டவர்கள் இச்சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியாது,  பிரிவு 2ன் கீழ் தொழிலாளி என்ற பதம் இவர்களுக்கு பொருந்தாது.

  

    

சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்Where stories live. Discover now