தொழிலாளர் இழப்பீடு சட்டம்

7 0 0
                                    

     முழுமையான தகுதி இழப்பு: செக்ஷன் 2(1)(1):

      முழுமையான தகுதியிழப்பு என்பது ஒருவர் விபத்திற்கு முன்னர் செய்துவந்த அனைத்து வேலைகளையும் செய்ய இயலாமல் போவது ஆகும். முழுமையான தகுதியிழப்பு  தற்காலிகமான தாகவோ  அல்லது நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.

முதலாளியின் இழப்பீடு வழங்கும் பொறுப்பு: பிரிவு 3

தொழிலாளர் இழப்பீடு சட்டம் பிரிவு 3ன் படி விபத்தினால் ஏற்படும் உடல் தீங்கு மற்றும் பணியின் தன்மையின் காரணமாக தொழிலாளி  பாதிக்கப்படும்போது அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவரது முதலாளியின் பொறுப்பாகும்.

     ஒரு தொழிலாளிக்கு அவரது பணியின் மூலம் ஏற்பட்ட விபத்து மற்றும் பணியின் போது ஏற்பட்ட விபத்தினால் ஏற்படும் உடல் தீங்கு இழப்பீடு வழங்க வேண்டியது முதலாளியின் கடமையென பிரிவு 3(1) கூறுகிறது.

       இழப்பீட்டு தொகையை கணக்கிடுதல் பிரிவு 4:

    1. விபத்தில் ஏற்பட்ட தீங்கின் தன்மை

    2.    தொழிலாளியின் மாத சம்பளம்

    3.  தொழிலாளியின் சம்பாதிக்கும் திறன் இழப்பு விகிதம்

   4.  தொழிலாளியின் வயது தொடர்புடைய காரணிகள்

  பிரிவு 4 ன் படி இழப்பீட்டு தொகை கீழ்காணும் காரணிகள் அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.

   1. மரணம்

   2.  நிரந்தரமான முழு தகுதி இழப்பு

   3.நிரந்தரமான பகுதி தகுதி இழப்பு

   4.  தற்காலிகமான முழு அல்லது பகுதி தகுதி இழப்பு

மருத்துவ செலவு முழுமையாக ஈடு செய்யப்பட வேண்டும் பிரிவு 4(2A):

      பணியின் போது ஏற்பட்ட உடல் தீங்கிற்கான சிகிச்சைக்காக  தொழிலாளி உண்மையில் செலவு செய்த மருத்துவ செலவுத் தொகையை முழுமையாக ஈடு செய்ய வேண்டும் என பிரிவு 4(2A)  விளக்குகிறது.

     இப்பிரிவின் படி தொழிலாளி மருத்துவமனையில் செலவு செய்த தொகையை  முழுமையாக  ஈடுசெய்ய கோரலாம்.

  

சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்Where stories live. Discover now