பிரிவு 2

5 1 5
                                    

பொருள் விளக்கங்கள்:

    சார்ந்திருப்பவர்கள்(dependant):
பிரிவு 2(1):
   i). இறந்தவரின் விதவை மனைவி, 18 வயது பூர்த்தியடையாத  மகன் அல்லது மகள், தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள் அல்லது விதவைத் தாயார்;

  ii).  தொழிலாளி இறக்கும்போது அவரது வருமானத்தை முழுமையாக சார்ந்து இருக்கும் 18 வயது பூர்த்தியடையாத உடல் அல்லது மன வலிமை குன்றிய மகன் அல்லது மகள்;

   iii).  தொழிலாளி இருக்கும்போது அவரது வருமானத்தை முழுமையாக அல்லது பகுதி அளவு சார்ந்து இருக்கும்

    a.மனைவியை இழந்தவர்

     b. விதவைத் தாயார் தவிர்த்து இறந்தவரின் பெற்றோர்

     c.  இளவர் ஆக இருக்கும் சகோதரர் அல்லது மணமாகாத சகோதரி அல்லது இளவராக  இருக்கும் விதவை சகோதரி;

   d. விதவை மருமகள்;

   e.முன்னதாக இறந்து விட்ட மகனின் இளவர் குழந்தை;

  f.  முன்னதாக இறந்து விட்ட மகனின் இலவர் குழந்தைக்குப் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லாதிருந்தால் அக்குழந்தை;

    g. தொழிலாளியின் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லை எனில் அவரது தந்தை வழி தாத்தா பாட்டி;

   பிரிவு 2(i) (e):

    முதலாளி:

     i. கூட்டு உருவாக்கப்பட்ட அல்லது கூட்டு உருவாக்கப்படாத நபர்களின் குழு

     ii. முதலாளியின் நிர்வாக முகவர்

   iii. இறந்துவிட்ட முதலாளியின் சட்ட பிரதிநிதிகள்

    iv.தொழிலாளியாக அல்லது வேலை பழகுனர் ஆக பணி ஒப்பந்தம் செய்து கொண்டவர் தனது தொழிலாளியை மற்றொருவருக்கு தற்காலிகமாக இரவல் கொடுத்து இருக்குமிடத்தில் இரவல் பணியை செய்யும் போது  அம்மற்றொரு தொழிலாளியின்  முதலாளி ஆவார்.

   
    தகுதி இழப்பு(Disablement):

    
இச்சட்டத்தின் கீழ் முதலாளியிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டுமெனில் பணியின் மூலம் அல்லது பணியின் போது ஏற்பட்ட விபத்தினால் உடல் தீங்கு ஏற்பட்டு இருக்க வேண்டும்.  அவ்வுடல் தீங்கினால் தொழிலாளிக்கு மரணம் அல்லது தகுதியிழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். தகுதியிழப்பு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கூட இருக்கலாம்.

   பகுதி தகுதி இழப்பு: (partial disablement)பிரிவு 2(1)(g):
விபத்தின் காரணமாக ஏற்பட்ட    தீங்கினால்  ஒருவரது சம்பாதிக்கும் திறனில் ஏற்படும் இழப்பு தகுதியிழப்பு எனப்படும். பிரிவு 2(1)(g)  பகுதி தகுதி இழப்பினை இரண்டு வகையாக பிரிக்கிறது.  அவை

i. தற்காலிக பகுதி  தகுதி இழப்பு:

    விபத்தினால் ஏற்பட்ட தகுதி இழப்பின் காரணமாக ஒருவர் அவர் விபத்தின்போது செய்துவந்த குறிப்பிட்ட வேலையை பொறுத்து மட்டும் அவரது  சம்பாதிக்கும் திறன் குறைந்து போனால் அது தற்காலிக பகுதி தகுதி இழப்பாகும்.

 

ii.  நிரந்தர பகுதி தகுதி இழப்பு:

     விபத்தினால் ஏற்பட்ட தகுதி இழப்பின் காரணமாக ஒருவர் விபத்துக்கு முன்னர் தான் ஏற்று செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பொருத்து அவரது சம்பாதிக்கும் திறன் குறைந்து போனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பு நிரந்தர பகுதி தகுதி இழப்பாகும்.

சட்டத்தில் வரும் மற்ற பிரிவுகளை வரும் பதிவுகளில் காணலாம்.
  

 
   
    

சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்Where stories live. Discover now